வணக்கம்!
ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடைவதற்க்கு அவர்களின் முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடு என்பது மிக மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த வழிபாட்டை பல வழிகளிலும் செய்துக்கொண்டு இருக்கின்றீர்கள். ஒரு முக்கிய வழிபாடு என்பதை சென்ற வருடம் சொல்லிருந்தேன் அதனை மறுமுறை இந்த நாளில் சொல்லுகிறேன்.
மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு என்று விஷேசமான படையல் என்பதை செய்வார்கள். உங்களின் தாத்தா ஒருவர் இறந்திருந்தால் அவருக்கு பிடித்தமான ஒரு பலகாரம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம் அதனை இந்த நாளில் நீங்கள் செய்து அவர்க்கு என்று வைத்து படையல் செய்து வழிபாடு செய்யவேண்டும்.
உங்களின் முன்னோர்களுக்கு என்று ஒரு வேஷ்டி சட்டை புடவை எடுத்து வைத்து நீங்கள் செய்த பலகாரம் போன்றவற்றை வைத்து சாமி கும்பிடவேண்டும். பெரும்பாலான மக்களை மாட்டுப்பொங்கல் அன்று இதனை செய்வார்கள்.
இந்த வழிபாடு என்பது எங்களின் பகுதியில் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செய்வார்கள். அவர்களுக்கு இதனை எங்களின் கடமை போலவே செய்யவேண்டும் இதனை செய்தால் நல்ல வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாட்டுப்பொங்கல் அன்றும் இதனை செய்து வந்தால் கண்டிப்பாக முன்னோர்களின் தோஷம் நீங்கி நல்லவாழ்க்கையை வாழலாம். இதனைப்பற்றி மேலும் தகவல் வேண்டுமானால் என்னை தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment