வணக்கம்!
ஜாதக கதம்பத்தை படிக்கும்
பல நண்பர்கள் பல வருடங்களாக தொடர்பில்
இருக்கின்றார்கள். இவர்களின் ஒவ்வொரு அசைவும் எனக்கு நன்றாக
தெரியும். பலர் நிறைய மாற்றங்களை
வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். மாற்றங்கள் என்பது இருக்கவேண்டும் அந்த
மாற்றம் என்பது நம்முடைய வாழ்க்கையில்
இருக்கவேண்டும் நமது செயல்பாட்டில் மாற்றத்தை
காட்டவேண்டியதில்லை.
வைராக்கியம்
ஆன்மீகவாதியின் எண்ணம் எப்படி இருக்கவேண்டும்
என்பதை என்னுடைய குரு சொல்லுவார். வைராக்கிய
எண்ணத்தோடு இருக்கவேண்டும். நமது எண்ணம் வைராக்கியத்தோடு
ஆன்மீகத்தை பற்றி இருக்கவேண்டும். இது
இருக்கும்பொழுது தான் இவன் என்றும்
மாறமாட்டான் இவனுக்கு தன்னுடைய அருளை கொடுக்கலாம் என்று
குரு முடிவு செய்வார்.
மனிதனிடம்
உள்ள பெரிய மைனஸ் என்ன
என்றால் கொஞ்சம் பணம் வந்துவிட்டால் அப்படியே
மாற்றிக்கொண்டு அதற்க்கு தகுந்தார் போல் மாறிவிடுகின்றனர். இது
ஆன்மீகத்திற்க்கு எதிரான ஒன்றாகவே இருக்கும்.
பணம் வருகின்றது பணம் போகின்றது நான்
அப்படியே ஒரே மனநிலையில் தான்
இருப்பேன் என்று இருந்தால் ஆன்மீகம்
உங்களுக்கு நிறைய கொடுக்கும்.
நான் சொல்லுவது வெளிக்காட்டுவது என்பது உங்களின் உடையில்
உங்களின் வாகனத்தில் அல்லது பகட்டில் அல்ல
உங்களின் எண்ணம் அதனை வெளிக்காட்டும்.
உங்களின் எண்ணம் ஒரே மாதிரி
வைராக்கியமாக ஆன்மீகத்தில் இருந்தால் உங்களிடம் கோடி கோடியாக வந்தாலும்
உங்களின் எண்ணம் அதனை காட்டிக்கொடுக்காது.
ஆன்ம சாதகம் செய்யும் ஆன்மீகவாதியாக
என்று இருங்கள். பணம் சம்பாதிக்ககூடாது என்று
நான் எந்த இடத்திலும் சொல்லவில்லை
ஆனால் நம்முடைய மனம் ஆன்மீகத்தை விட்டு
விலகாமல் நிறைய சம்பாதியுங்கள்.
பத்து வருடத்திற்க்கு முன்பு என்னை சந்தித்து
இருந்தால் அன்று எப்படிப்பட்ட மனநிலையில்
இருந்தேன் என்பது தெரியும் அதே
மனநிலை இன்றும் என்னிடம் இருக்கின்றது.
இதனை பார்த்த அனைத்து நண்பர்களுக்கும்
நன்றாக தெரியும். இதனை தான் ஒரு
குரு உங்களுக்கு உபதேசம் செய்வார்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment