Followers

Tuesday, January 8, 2019

எத்தனை கைகளை சம்பாதித்தீர்கள்?


வணக்கம்!
          ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் சம்பாதிப்பது பணம் என்பதை விட அவனுக்கு என்று பல உதவிகரம் நீட்டும் ஆட்களை சம்பாதித்து வைத்து இருக்கவேண்டும். நமக்கு இரண்டு கைகளை படைத்து இருக்கிறான். நாம் சம்பாதிப்பது நிறைய கைகளை சம்பாதிக்கவேண்டும்.

என்னடா நிறைய கைகளை சம்பாதிக்கவேண்டுமா என்று கேட்கலாம் அல்லவா. நமக்கு ஆபத்து என்று வந்தால் நம்மை தாங்க நிறைய கைகள் ஓடி வரவேண்டும். நிறைய மனிதர்களை நாம் சம்பாதித்து வைத்திருந்தால் இவர்கள் எல்லாம் நம்மை காக்க அவர்கள் வருவார்கள் என்று சொல்லுவதை தான் நிறைய கைகள் தாங்கவேண்டும் என்று சொல்லுகிறேன்.

இதனை சம்பாதிப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. நாம் நடந்துக்கொள்ளும் முறையில் இது இருக்கின்றது. நாமும் அடுத்தவர்களுக்கு உதவி இருந்தால் தான் ஓடி வருவார்கள். நாம் எதுவும் செய்யாமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தால் ஒருத்தர் கூட வரமாட்டார்கள்.

இன்றைக்கு இருக்கும் உலகம் அவர்களின் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பது போலவே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சொந்தகாரர்களையும் கண்டுக்கொள்வது கிடையாது. நட்பு வட்டங்களையும் கண்டுக்கொள்வது கிடையாது என்ற ரீதியாகவே செயல்படுகின்றீர்கள்.

உயிரோடு இருக்கும்பொழுது உங்களின் கைகளை நம்பினாலும் உயிர் போன பிறகு நான்கு பேராவது உங்களின் உடலை சுமக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு செயல்படுங்கள். நிறைய கைகளை சம்பாதியுங்கள் அடுத்த பிறகு பணத்தை சம்பாதிக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: