வணக்கம்!
பழனி யாத்திரை இந்த
வாரம் செல்கிறேன். இதனை அறிவித்த நாளில்
இருந்து பல பிரச்சினைகள் எனக்கு
ஏற்பட்டது இருந்தாலும் உங்களிடம் சொல்லிவிட்டு இதனை செய்யவேண்டும் என்று
தான் எழுதினேன். பொருட் செலவில் அதிகளவில்
என்னை பாதித்துக்கொண்டு இருக்கின்றது. எவ்வளவு பிரச்சினை வந்தாலும்
அதனை சமாளித்துக்கொண்டு செல்லவேண்டும் என்று உறுதியோடு இருக்கிறேன்.
நமது கர்மாவை ஒட்டுமொத்தமாகவே நம்மிடம்
இருந்து எடுத்துக்கொள்வதற்க்கு இப்படிப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் நமக்கு வரும்
அதனை தாண்டி இதனை செய்யவேண்டும்
என்ற உறுதியோடு செயல்படவேண்டும். உங்களிடம் அனுபவத்தில் எப்படி நடக்கும் என்பதை
காட்டுவதற்க்கு இதனை செய்தேன்.
கர்மா என்ற ஒன்று இருக்கின்றதா
என்பதை நாமே சோதித்து பார்ப்பதற்க்கு
கூட இப்படிப்பட்ட செயலை செய்து பார்த்து
நாமே தெரிந்துக்கொள்ளலாம். பாதயாத்திரை ஒரு செயல் என்றாலும்
பல ஆன்மீக செயல் எல்லாம்
செய்யும்பொழுது தான் நமது கர்மா
நம்மிடம் இருந்து விலகும்.
ஜாதகத்தில்
நிறைய தோஷங்களை கொண்ட ஜாதகர்கள் எல்லாம்
இப்படிப்பட்ட செயல்களை எல்லாம் செய்தால் கண்டிப்பாக
உங்களின் தோஷங்கள் எல்லாம் விலகி உங்களின்
வாழ்க்கை மட்டும் இல்லை உங்களின்
வாரிசுகளின் தோஷங்களும் நீங்கும் என்பதை மட்டும் நீங்கள்
புரிந்துக்கொண்டு செயல்படுங்கள்.
ஒருவருக்கு
வாழ்க்கை என்பது நல்ல வாழ்க்கை
அமைந்தாலும் வீழ்ச்சி இல்லாத வாழ்க்கை அடையவேண்டும்
என்பதற்க்காக தான் இப்படிப்பட்ட ஆன்மீக
செயல்கள் எல்லாம் செய்யவேண்டும் என்று
சொல்லுவது உண்டு. கண்டிப்பாக உங்களின்
வாழ்க்கைக்காகவும் உங்களின் வாரிசுகளின் வாழ்க்கைக்காகவும் முயற்சி எடுங்கள்.
உங்களுக்கு
வருகின்ற பிரச்சினையே கூட உங்களால் தடுக்கமுடியவில்லை
அடுத்தவர் பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும்
என்று உங்களின் மனது கேட்கும். பொதுவாக
இப்படிப்பட்ட காரியங்களை செய்யும்பொழுது என்னுடைய ஆன்மீக சக்தியை நான்
பயன்படுத்துவது கிடையாது நம்முடைய கர்மாவை மட்டுமே போக்குவதில்
மட்டுமே காட்டி அதனை அனுபவமாக
உங்களுக்கு கொடுக்கிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment