வணக்கம்!
பலருக்கு நான் ஆன்மீகவழியில் வேலை செய்யும்பொழுது நடைபெறும் ஒரு சில விசங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். இதனை வைத்து நீங்களே புரிந்துக்கொள்ளலாம். ஒருவர் எந்தவித தவறும் செய்யாமல் வந்து ஒரு பிரச்சினை மட்டும் வந்துவிட்டது இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் எனக்கு வந்துவிட்டது என்னை இதில் இருந்து காப்பாற்றுங்கள் என்றால் உடனே அதனை செய்துக்கொடுத்துவிடுவது உண்டு.
அவர் ஒரு எதார்த்தவாதியாக இருந்து அவர் எந்த வித தவறும் வாழ்க்கையில் செய்யாமல் இருந்தால் அவரை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற நாம் நினைத்த உடனே அவரை அம்மன் காப்பாற்றும். ஒரு சிலர் நிறைய தவறுகளை செய்துவிட்டு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு அவரை காப்பாற்ற நாம் நினைக்கும்பொழுது அது உடனே நடைபெறாமல் காலம் தாழ்த்தி நடைபெறும் என்றால் அவரிடமும் பீடை இருக்கின்றது என்று அர்த்தம்.
நிறைய பேர்கள் ஒரு கோவிலுக்கும் விடாமல் சென்றுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் செய்யும் செயல்கள் வழியாக அவர்களுக்கு பீடை வந்துவிடுகின்றது. நிறைய கெட்ட நினைப்பு இருக்கும் இந்த கெட்ட நினைப்பு அவர்களுக்கு பீடையை கொடுத்துவிடுகின்றது. இதனால் அவர்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறாமலே இருக்கின்றது.
யாரையும் குற்றம் சொல்ல இதனை சொல்லவில்லை உங்களின் மனதை மிகச்சரியாக பழக்கிக்கொள்ளுங்கள் என்பதற்க்காக இதனை சொல்லுகிறேன். எந்த ஒரு கெட்ட நினைப்பும் உள்ளே வராமல் நீங்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த ஒரு சாமியாரும் தேவையில்லை கடவுளே உங்களை நாடி கொண்டு வந்து கொடுப்பார்.
மனதை நல்ல விதமாக வைத்துக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். அதனை தயார்படுத்தி நீங்கள் வைத்துக்கொண்டால் உங்களின் தேவைகள் அனைத்தும் இயற்கையாகவே உங்களுக்கு கிடைக்கும். மனது சம்பந்தம் இல்லாமல் போட்டு குழப்பிக்கொண்டே இருக்கும்பொழுது அது உங்களுக்கு பீடையாகவே உருவாகிவிடுகின்றது.
ஒரு சின்ன உதாரணத்தை உங்களிடம் சொல்லுகிறேன். ஒருவருக்கு இராகு தசா நடந்தால் அவரின் நினைப்பு எந்த நேரமும் காமத்தை நோக்கியே சென்றுக்கொண்டு இருக்கும். காம எண்ணம் தவறு என்று சொல்லவில்லை அது எந்த நேரமும் இருக்கும்பொழுது தான் பீடையாக இருக்கின்றது. இதனை புரிந்துக்கொண்டால் போதும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment