வணக்கம்!
அம்மன் கோவில் கட்டும்பணி ஆயத்தம் ஆகபோகின்றது. விரைவில் பணியை தொடங்க திட்டமிட்டுள்ளோம். கட்டும்பணிக்கு முன்கூட்டி நடைபெறும் ஆயத்தபணிகளை தற்பொழுது செய்துக்கொண்டு வருகிறோம்.என்ன என்ன நடந்துக்கொண்டு இருக்கின்றது என்பதை வாட்ஸ்அப்பில் அவ்வப்பொழுது தெரிவித்துக்கொண்டே இருக்கின்றேன்.
ஒரு சில காரணங்களால் கோவில் வேலையை உடனே தொடங்க முடியாமல் இருந்தது அது எதனால் என்று நமது நண்பர்களிடம் கூடுமானவரை தெரிவித்து இருந்தேன். தற்பொழுது அதற்கான வேலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதை வாட்ஸ்அப்பில் பார்த்து தெரிந்துக்கொண்டு இருக்கின்றனர்.
நமது நண்பர்கள் அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்து வருகின்றனர். ஒருத்தரும் செய்யவில்லை என்பதை சொல்லுவதைவிட ஒவ்வொருவரும் நிறைய உழைப்பை இதற்க்கு என்று போடுகின்றனர். அவர்களின் சொந்தபணி போல இதனை செய்வதால் சிறப்பான ஒரு பங்களிப்பு இருக்கின்றது.
ஜாதககதம்பத்தில் இதுவரை பங்களிப்பை அளிக்காதவர்கள் இருந்தாலும் இனிமேலும் தங்களின் உழைப்பை இதற்கு என்று கொஞ்சம் போடுங்கள். நல்ல பணியை தேர்ந்தெடுத்து செய்துக்கொண்டு இருக்கின்றோம். பல ஆயிரம் பேர் இருக்கின்றனர் அனைவரின் உழைப்பும் இதற்கு என்று தேவை என்பதல் இதனை செய்யுங்கள் என்று கேட்கிறேன்.
அம்மனின் அருள் முழுமையாக உங்களுக்கு கிடைப்பதற்க்கு இந்த பணி எடுத்து செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். மிகப்பெரிய பணியை பலர் இணைந்து தான் இதனை செய்யவேண்டும் என்பதால் இதனை உங்களிடம் தெரிவித்துக்கொண்டே வருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment