Followers

Saturday, June 15, 2019

பெளர்ணமி அமாவாசை நாட்களில்


வணக்கம்!
          பெளர்ணமி நாட்களிலும் அமாவாசை அன்றும் ஏதாவது ஒரு கோவில் அல்லது ஜீவசமாதிகளை சென்றுதரிசனம் செய்துவிட்டு வருவது நல்லது. நமது நண்பர்கள் அனைவரும் தான் சென்று தரிசித்த சித்த சமாதிகளை என்னுடைய வாட்ஸ்அப்பில் அனுப்புவார்கள் அதனை நான் பார்த்து நல்ல தரிசனம் செய்வதும் உண்டு. 

நான் அங்கு செல்லுவதற்க்கும் ஒரு வழி வகை செய்கின்றனர் அதோடு அவர்கள் சென்றதால் அவர்களின் ஆன்மீக உத்வேகம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பதையும் நாம் தெரிந்துக்கொள்ளவும் முடிகின்றது. இன்றைய காலத்தில் சித்தர்கள் பேரைச்சொல்லி நடக்கும் கூத்துகளை விட இவர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு அமைதியாக இருப்பதே பெரிய விசயமாகவே நான் கருதுகிறேன்.

பெளர்ணமி அன்று மட்டும் ஏதோ ஒரு விஷேசமான கோவிலுக்கு சென்று வருதல் அல்லது சித்தர்கள் ஜீவசமாதியை தரிசனம் செய்துவிட்டு வருதல் உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை உருவாக்கும். அமாவாசைக்கு இதனை செய்யலாம். அமாவாசை அன்று மட்டும் அந்த நாளில் விஷேசமாக இருக்கும் அம்மன் கோவில் மற்றும் எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் சென்று வரலாம்.

பல இடங்களுக்கு பெளர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நான் சென்று வந்த காரணத்தால் பல நல்ல மாற்றங்கள் என்னுடைய வாழ்க்கையிலும் நடந்து இருக்கின்றது இதனை நீங்கள் செய்துக்கொண்டு வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை அடைய விரும்புகிறேன்.

பெளர்ணமி சிறப்பு பூஜை நடக்க இருக்கின்றது. தங்களின் வேண்டுதல்கள் மற்றும் விருப்பங்கள் எனக்கு அனுப்பி வையுங்கள். தங்களின் வேண்டுதலை அதில் நான் வைக்கிறேன். நாளை இரவு பெளர்ணமி சிறப்பு யாகம் நடைபெற இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: