Followers

Monday, June 3, 2019

பித்ருதோஷம்


வணக்கம்!
         மூன்றாவது வீட்டில் உள்ள பித்ருதோஷத்தைப்பற்றி சொல்லவில்லை அதனைப்பற்றி சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். பல பதிவுகளில் இதனை நாம் பார்த்து இருக்கிறோம் என்று இதனை தவிர்த்தேன்.

பித்ருதோஷத்தை இப்படி நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு மனிதனுக்கு உச்சகட்ட அவமானத்தை ஏற்படுத்தி அதன்பிறகு அவர்களை யாசகம் கேட்கும் நிலையில் இருக்க வைப்பது தான் பித்ருதோஷம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு இடத்திற்க்கு சென்று அடுத்த மனிதர்களை விட உங்களை யாரும் மதிக்கவில்லை என்றால் நீங்கள் பித்ருதோஷத்தில் இருக்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கே ஒரு இழிவுபோல உணர்ந்தாலும் பித்ருதோஷம் என்பதை தான் சாரும்.

எப்படிப்பட்ட பித்ருதோஷமும் ஒரு காலக்கட்டத்திற்க்கு பிறகு மாறிவிடும். கடைசிவரை அப்படியே தான் இருந்துக்கொண்டு இருப்பார் என்று இருக்கவேண்டியதில்லை. ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு முக்கால்வாசி பேருக்கு மாறிவிடுகின்றது.

பித்ருதோஷம் இருப்பவர்கள் தான் ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு பெரிய அளவில் சாதிக்கின்றனர். இன்றைக்கு இருக்கும் சாதனை புரிந்த அதிகபட்சம் பேரின் ஜாதகத்தில் பித்ருதோஷம் இருப்பதை காணமுடிகின்றது.

ஒரு சிலருக்கு மட்டும் அது பெரியளவில் வேலை செய்யாமல் இருக்கின்றது. அவர்கள் முடிந்தவரை நிறைய ஆன்மீகயாத்திரை சென்றால் அதுவும் விலகி நன்மை பயக்கும்.  நம்பிக்கையோடு ஆன்மீக விசயங்களில் ஈடுபட்டு வாருங்களகண்டிப்பாக நன்மை நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: