வணக்கம்!
ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு தோஷங்கள் இல்லாமல் போய்விடுவதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது. ஒரு சில தோஷங்கள் மட்டும் வேலை செய்யும் அதுவும் மனரீதியாக வேலை செய்வதற்க்கு வாய்ப்பு இருக்கின்றது.
உதாரணத்திற்க்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் கஷ்டப்பட்டு வளர்ந்து வந்தீர்கள் ஆனால் உங்களின் வாரிசுகளை அப்படி விட்டுவிடுவீர்களா? நீங்கள் கஷ்டப்பட்டு வளர்த்த அனைத்தையும் கொண்டு உங்களின் வாரிசுகளை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றீர்கள். பெரும்பாலும் அவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்கின்றார்கள் அல்லவா.
உங்களின் வாரிசுகளுக்கு உள்ள தோஷங்கள் அனைத்தும் போய்விட்டதாகவே நீங்கள் எடுத்துக்கொண்டு செயல்படுகின்றீர்கள். உங்களின் வாரிசுகளுக்கு தோஷங்கள் பெரியதாக வேலை செய்வதில்லை. அவர்களின் தோஷங்கள் எடுபடவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம்.
உலகத்தில் உள்ள வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்களுக்கு பெரும்பாலும் நல்ல வாழ்க்கையை வாழ்கின்றார்கள். ஒட்டுமொத்தமாகவே தோஷங்கள் பெரியதாக வேலை செய்யவில்லை என்று எடுத்துக்கொள்ளலாம். தேவைகளை பூர்த்தி செய்துவிடுகின்றனர். ஒரு சில சின்ன சின்ன தேவைகள் மட்டும் இருக்கலாம்.
இந்தியாவிலும் இப்படிப்பட்ட வளர்ச்சி வந்துவிட்டால் எப்படியும் வந்துவிடும் அதன்பிறகு தோஷங்கள் குறைந்து நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். சின்ன சின்ன விசயங்கள் இருக்கலாம். தோஷத்தால் பெரிய பாதிப்புகள் வராது. உங்களின் வாரிசுகளின் வாரிசு நல்ல வாழ்க்கை வாழும் அவர்களுக்கு தோஷம் என்பது இருக்காது.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment