வணக்கம் நண்பர்களே இப்பதிவில் நாம் பார்க்க போவது சோதிடத்தில் ஒரு சுவாராசியமான மேட்டர் நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் எனது சொந்த ஊருக்கும் பள்ளிகூடம் இருக்கும் இடத்திற்க்கும் தொலைவு சுமாராக நான்கு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். அப்பொழுது நான் எனது நண்பர்களுடன் நடைபயணமாகத்தான் சென்றுவருவேன். நடைபயணம் செல்லும்போது அடிக்கும் அரட்டை இருக்கிறதே அது அவ்வளவு இனிமையானது வழி நெடுகிலும் அவ்வளவு சுவாராசியமாக இருக்கும். அதை நினைத்தாலே அவ்வளவு இனிமை . அந்த நாள்கள் கிடைப்பது அவ்வளவு அரிது.
பள்ளி கல்வியை முடிக்கும் வரையிலும் நடைபயணம் தான். அதன் பிறகு தபால் வழியில் தான் கல்வியை பயின்றேன். ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு படிப்பை தொடர்ந்தேன். அப்பொழுதும் அந்த நிறுவனத்திற்க்கு செல்வதற்க்கு இரண்டு கிலோ மீட்டர் பஸ்யை விட்டு நடந்துதான் செல்ல வேண்டும். அந்த கம்பெனியில் வேலை செய்வதில் வெளி இடங்களுக்கு செல்வது நடந்துதான் செல்வேன்.
அதன் பிறகு சென்னை வந்தேன் சென்னையில் வேலை பார்த்த இடங்களில் நான் தங்கி இருந்த அறையில் இருந்து பஸ் ஏறுவதற்க்கு எனது பஸ் நிறுத்தத்தில் இருந்து அடுத்த பஸ் நிறுத்தத்தில் தான் போய் பஸ் ஏறுவேன். அதைபோல் பஸ் இறங்குவதற்க்கு எனது பஸ் நிறுத்தத்தில் முன் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்து வருவேன் அப்பொழுது தான் எனக்கு இரவு நித்திரை வரும்.
இப்பொழுது நான் தங்கி இருப்பது அடையாரில் நமது ஆபிஸ் இருப்பது கொட்டிவாக்கத்தில் அங்கு நான் தினமும் நடந்து தான் சென்று வருவேன். அதுதான் எனக்கு பிடிக்கும். இதில் நான் மாதம் தோறும் திருவண்ணாமலை கிரிவலம் சென்று வருவேன். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு செல்லவில்லை. என்னவென்று தெரியவில்லை அந்த அண்ணாமலையான் என்னை கூப்பிடவில்லை.
நான் சோதிடம் தெரியாத நாட்களில் சிந்தித்தது உண்டு ஏன் நமக்கு நடப்பதற்க்கு இவ்வளவு பிடிக்கிறது நாம் எங்கு சென்றாலும் நடையாக செல்ல விருப்பம் ஏற்படுவது எதற்காக என்று நினைத்திருந்தேன். நான் சோதிடம் படித்து சோதிட தொழில் செய்து வந்தபோதும் இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை.
ஒரு சமயம் ஒரு பழைய சோதிட புத்தகத்தை படிக்க நேர்ந்தது அந்த புத்தகத்தின் பெயர் தெரியவில்லை அந்த புத்தகத்தில் லக்கனத்தில் சந்திரன் இருக்கபெற்றால் அவர்களுக்கு நடைபயணத்தின் மீது அதிகம் ஆர்வம் ஏற்படும் என்று இருந்தது. பல நாள் தேடிய விஷயத்திற்க்கு அப்பொழுதுதான் விடைகிடைத்தது. எனக்கு லக்கினத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார்.
நமக்கு நடக்கும் அத்தனை விஷயங்களுக்கும் சோதிடத்தில் செல்லபட்டு இருக்கிறது. அதை நாம் தான் கவனிப்பதற்க்கு நேரம் இல்லை. அமைதியாக இருந்து ஜாதகத்தை அலசி ஆராய்ந்தால் உங்களுக்கு நடக்கும் நிகழ்விற்க்கு அனைத்திற்க்கும் உங்கள் ஜாதகத்தில் பதில் இருக்கும்.
நண்பர்களே சோதிடம் மற்றும் ஒரு திருமண நிகழ்ச்சிகாக தஞ்சாவூர் செல்வதால் நான்கு நாட்களுக்கு பதிவு போடமுடியாது என்று நினைக்கிறேன். அங்கு நேரம் இருந்தால் பதிவை எழுதுகிறேன். தஞ்சாவூரில் இருப்பவர்கள் நேரில் சந்திப்பதாக இருந்தால் தொடர்புக்கொள்ளலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment