வணக்கம் நண்பர்களே சில நாட்களாக வெளியூர் பயணத்தினால் பதிவு எழுதமுடியவில்லை அங்கு சென்று பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் ஆனால் போனவேலை இழுத்து அடித்துவிட்டது நெட் பக்கம் போகவில்லை.
சென்னை வந்து இதுவரை வந்த இலவச சோதிட ஆலோசனையை பலன் கூறிவிட்டு பதிவை எழுதுகிறேன். இலவச சோதிட ஆலோசனை பாதி பேருக்கு இன்னமும் கூறவில்லை. அனைத்து பேருக்கும் கூடிய விரைவில் பலனை சொல்லுவதற்க்கு கடவுள் அருள் புரியவேண்டும்.
இலவச சோதிட ஆலோசனை பெறுபவர்கள் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நான் மட்டும் பயன் அடைந்தால் போதும் அடுத்தவன் எப்படி கெட்டால் நமக்கு என்ன என்று இருக்காமல் உங்களால் முடிந்தவர்களுக்கு தெரியபடுத்துங்கள். அது உங்களுக்கு பெரும் புண்ணியமாக இருக்கும்.
இந்த பதிவை படிக்கும் நண்பர்களுக்கு ஒன்று சொல்ல ஆசைபடுகிறேன். நான் கூறும் பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் தான் அந்த பலன்களை நீங்கள் படித்துவிட்டு எனக்கு ஏழில் சனி இருக்கிறது எனக்கு இரண்டு தாரம் அல்லது ஐந்தில் கெட்ட கிரகம் இருக்கிறது எனக்கு குழந்தை பாக்கியம் கிடையாது என்று நீங்களாகவே நினைத்து கொள்ளவேண்டாம் என நான் உங்களுக்கு கூறிகொள்ள ஆசைபடுகிறேன்.
நான் சொல்லும் பலன்களும் அல்லது வேறு சோதிடர்கள் கூறும் பலன்களும் அனைத்தும் பொதுபலன்களாகதான் இருக்கும் நாங்கள் ஐந்தில் சனி இருந்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது அல்லது தத்துபிள்ளை யோகம் என்று கூறுவோம் ஆனால் அந்த ஜாதகருக்கு நல்ல குழந்தை சில காலங்களில் பிறந்துவிடும். அது வேறு நிலைகளை வைத்து குழந்தைபாக்கியம் கிடைத்துவிடும்.
ஒன்பது கிரகங்கள் இருப்பத்தி ஏழு நட்சத்திரங்கள் பனிரென்டு ராசிகளை கட்டி ஆளும் கடவுள் அனைத்திலும் உயர்ந்தவர் அவரை நாம் சரண் அடைந்தால் அனைத்தும் கிடைத்துவிடும் முதலில் அவரை நம்புங்கள். கிரகங்கள் எப்படி இருந்தாலும் கடவுளை நம்பினால் அவன் உங்களுக்கு வழிகாட்டுவான்.
வழக்கமாக நாம் குரு பெயர்ச்சி அல்லது சனி பெயர்ச்சி பற்றி படிப்போம் அதில் குருவும் சனியும் நல்ல இடத்திற்க்கு வரும்போது நமக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்போம். அதுபோல நல்லது நடக்கும்.
அதில் மறைந்திருக்கும் உண்மை என்ன என்றால் குரு, சனி பெயர்ச்சி நடக்கும் போது நல்ல நிலைக்கு குருவும் சனியும் வரும்போது நமக்கு கடவுளின் முழு பலம் நமக்கு கிடைக்கிறது. அது உங்களுக்கு நல்ல பலனை தருகிறது.
நீங்கள் தொட்ட அனைத்து விஷயங்களிலும் நல்லதே நடக்கிறது. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ளுவது என்ன என்றால் கடவுளின் பலம் நமக்கு கிடைக்க வேண்டும் அப்பொழுது தான் அனைத்திலும் வெற்றிக்கொள்ள முடியும்.
கெட்ட நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கும் காலங்களில் நமக்கு கெடுதல் நடப்பதும் கடவுளின் பலம் நமக்கு கிடைக்கவில்லை என்று தான் அர்த்தம். நமக்கு தேவை கடவுளின் பலம் தான்.
இதனை படிக்கும் நீங்கள் கடவுளின் பலத்தை நாம் நம்பினால் அனைத்தையும் அவன் பார்த்துக்கொள்வான். நீங்கள் இதனை படிக்கும்போது நினைக்கலாம் கடவுள் பார்த்துக்கொள்வான் என்று சொன்னால் ஏன் சோதிடத்தை பார்க்க வேண்டும் என்று கேட்க தோன்றும்.
சோதிடம் என்பதே நாம் முன்பிறவியில் செய்த பாவத்தை இந்த பிறவியில் அனுபவிக்க நாம் மனித பிறப்பு எடுத்துள்ளோம் அதில் உங்களுக்கு என்ன என்ன பிரச்சினை உள்ளது என்று தெரிவிக்கும் ஒரு உபகரணம் தான் சோதிடம்.
அந்த பிரச்சினையில் இருந்து விடுபட என்ன வழி உள்ளது என்று பார்த்தால் தெரிந்துவிடும். அதனை கொண்டு இந்த பிறவியை கடந்துவிடலாம். என்ன நண்பர்களே நான் சொன்னது உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment