வணக்கம் நண்பர்களே! இப்பதிவு எனது சொந்த ஊரில் இருந்து எழுதுகிறேன். எனது குலதெய்வ பூஜை அதனால் எனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. குலதெய்வத்தை பற்றி ஏற்கனவே நான் பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன். நான் சென்னை வந்ததும் உங்களின் ஆவலை பூர்த்தி செய்கிறேன்.
இந்த பதிவே பட்டுக்கோட்டையில் ஒரு நெட் சென்டரில் டைப் செய்து பதிவு ஏற்றியுள்ளேன். எனது குலதெய்வம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி. எனது சோதிட சேவையின் மிக மிக்கிய காரணகர்தாவாக இருப்பவள் இந்த அன்னை தான். உங்களுக்காக நான் அவளிடம் வேண்டிக்கொள்கிறேன்.
இது இருப்பது தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு் தாலுக்கா ஆம்பலாபட்டு என்ற கிராமத்தில் உள்ளது. இது இருக்கும் தெரு பெயர் பாலாயிக்குடிக்காடு. இந்த கோவில் ஒரு சில குடும்பத்திற்கு சொந்தமான கோவில். ஆனால் இவள் செய்யும் கருணையால் பல குடும்பங்கள் இந்த கோவிலை தன் குலதெய்வமாகவே கும்பிட்டுவருகிறார்கள். இந்த அன்னை செய்த செயலை வைத்து பதிவு எழுதவேண்டும் என்றால் ஆயிரம் பதிவு போடலாம் அந்த அளவுக்கு சிறப்பு இருக்கிறது இதனைப் பற்றி நான் எழுதுகிறேன்.
உங்களுக்கு தேவையான அனைத்து வளத்தையும் அவள் அளிப்பாள். நமது பதிவு வரும் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் அதே நேரம் எனது நேர பற்றாக குறைவால் உங்களை நான் கூப்பிடமுடியவில்லை. உங்களுக்காக நான் வேண்டிக்கொள்கிறேன். அன்னையின் அருளால் அடுத்த வருடம் நடைபெறும் பூஜை யில் உங்களை நான் கூப்பிடுகிறேன். இடையில் ஏதும் சிறப்பு விழா நடந்தாலும் உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்.
நமது சோதிட ஆலோசனைக்காக தொடர்பு கொண்டவர்கள் இரண்டு நாள்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். சென்னை வந்தவுடன் உங்களின் தேவையை நிறைவேற்றுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment