வணக்கம் நண்பர்களே கடந்த பதிவில் திருமணத்தை பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக களத்திர பாவத்தை பற்றி பார்க்கலாம். ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கோ திருமண வாழ்க்கை அமைவது எப்படி என்று பார்ப்பதற்க்கு இந்த களத்திர பாவத்தை வைத்துதான் பார்க்க முடியும். தனக்கு வருவது தேவதையா அல்லது பிசாச என்று பார்க்கலாம். அந்த பாவம் எப்படி எல்லாம் வேலை செய்கிறது என்று பார்க்கலாம்.
பொதுவான ஒரு விதி என்ன என்றால் ஏழாம் வீட்டில் நல்ல கிரகங்களும் இருக்ககூடாது. தீய கிரகமும் இருக்ககூடாது . சுத்தமாக இருக்க வேண்டும். ஏழாம் வீட்டு அதிபதி நல்ல இடத்தில் அமரவேண்டும். குருவின் பார்வையில் இருந்தால் நல்ல சிறப்பு. இப்படி எல்லாம் அமைவது என்றால் லட்சத்தில் ஒருவருக்குதான் அமைய வேண்டும். ஏதோ அவன் அவன் செய்த புண்ணியம் திருமண வாழ்க்கை நல்ல முறையில் ஒடிக்கொண்டிருக்கிறது.
இதில் அப்பா அம்மா செய்த புண்ணியம் பெரும் பங்கு வகிக்கின்றது. ஒரு சில இடங்களில் அப்பா அம்மா செய்த பாவங்கள் தங்கள் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமண வாழ்வில் மிக பெரிய பிரச்சினை உருவாகின்றது. இதை ஏன் சொல்லுகின்றேன் என்றால் அனுபவத்தில் நான் பார்த்த ஜாதகங்களில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவது அவர்களின் தாய் தந்தை செய்த பாவங்களாக தான் இருக்கிறது.
ஏழாம் அதிபதி ஆட்சியில், உச்சத்தில் அல்லது நட்பு வீட்டில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. குருவின் பார்வையில் ஏழாம் அதிபதி இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமைகிறது. ஏழாம் வீட்டு அதிபதி உச்சம் அடைந்து அந்த பெண்னை திருமணம் செய்தால் திருமணத்திற்க்கு பிறகு அந்த பையன் புகழின் உச்சிக்கே சென்றுவிடுவான்.
ஏழாம் வீட்டை எந்த ஒரு பாவகிரகங்களும் பார்வை செலுத்தகூடாது அப்படி இருக்கும் பட்சத்தில் திருமண வாழ்க்கை நன்றாக அமையும். களத்திர காரகன் என்று சுக்கிரனை அழைப்பார்கள். சூரியனுடன் சுக்கிரன் அஸ்தங்கம் ஆககூடாது. சுக்கிரன் நல்ல நிலைமையில் இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.
இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
No comments:
Post a Comment