வணக்கம் நண்பர்களே! இப்பதிவில் நாம் பார்க்கபோவது தசாபலன்களைப் பற்றிதான். தசாபலனின் பதிவின் தொடர்ச்சி இது ஒருவனுக்கு முதல் தசை என்பது அந்த ஜாதகனின் பிறந்த நட்சத்திரத்தையொட்டி தான் ஆரம்பம் ஆகும். ஒருவன் திருவோண நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு சந்திர தசை தான் முதல் தசையாக ஆரம்பம் ஆகும். ஒருவன் மகம் நட்சத்திரத்தில் பிறந்தால் அவனுக்கு முதல் தசையாக கேது தசா தான் முதல் தசாதான் ஆரம்பம் ஆகும்.
ஒவ்வொருவருக்கும் ஆரம்பமாகும் முதல் தசை ஜன்ம நட்சத்திரத்தின் முழு காலமும் இருக்காது. ஒருவருக்கு திருவோன நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம். அந்த தசை முழுமையாக சந்திரன் பத்து வருடம் இருக்காது ஒரு சிலருக்கு 1 வருடம் இருக்கலாம் அல்லது குறைந்த நாட்களாக இருக்கலாம்.
திருவோணம் நட்சத்திரம் ஆரம்பித்து முதல் விநாடியில் பிறந்தால் சந்திரன் தசை 10 வருடமும் இருக்கும். தசா நாட்களை முடிவு செய்வது அந்த நட்சத்திரம் கடக்கும் விநாடியை பொருத்தது. கர்ப்ப செல் இருப்பை கணிப்பை வைத்துதான் தசா நாட்கள் கண்டறிய முடியும். இந்த கணக்கு எல்லாம் கொஞ்சம் காலம் சென்றவுடன் நான் எழுதுகிறேன். இப்பொழுது எழுதினால் புதியவர்களுக்கு கடினமாக இருக்கும்.
புக்தி
புக்தி என்பது தசையில் ஒரு பாகம்( Sub-period) எனப்படும். உதாரணமாக சந்திரன் தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். சந்திரன் 10 வருடமும் முழுமையாக ஆட்சி நடத்தாது. சந்திரன் தசாவில் ஒன்பது கிரகமும் ஒவ்வொன்றாக சந்திரனுக்கு கீழ் ஆட்சி நடத்துவார்கள். ஒருவருக்கு பிறந்தபோது சந்திரன் தசா ஆரம்பித்தால் முதல் புக்தி சந்திரன் தான் இருக்க வேண்டும் என்று சொல்லமுடியாது. அவர் சந்திரன் தசாவில் எந்த புக்தியிலும் பிறந்து இருக்கலாம்.
முழுமையாக ஒரு தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த தசாவின் நாயகன் தான் முதல் புக்தி நாதனாக வருவார். உதாரணமாக ஒருவனுக்கு செவ்வாய் தசா ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய் தசாவில் செவ்வாய் புக்தி தான் ஆரம்பம் ஆகும். அதன் பிறகு ராகு புக்தி என்று வரும். இவ்வாறாக ஒவ்வொன்றாக புக்தி வரும். ஒன்பது கிரகத்தின் புக்தியும் வரும்.
புக்தியின் பலன் என்ன ?
ஒரு ஜாதகனுக்கு ஒரு கிரகத்தின் கெடுதல் தசா நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம் அந்த கிரகத்தின் தசா முழுவதும் கெடுதல் நடக்காது. இடையில் வரும் புக்தி நாதன் அந்த கெட்ட கிரகத்தின் கெடுபலனை குறைத்து நல்ல பலனை தருவார். அதைபோல் ஒருவருக்கு ஒரு கிரகத்தின் நல்ல தசா நடக்கும்போது அந்த கிரகத்தின் முழுகாலமும் நன்மை நடக்காது இடையில் வரும் கெட்ட புக்தி நல்ல பலனை குறைத்து கெடு பலனை தருவார். இதுதான் புக்தியின் பலன்.
என்ன தெரிகிறது என்றால் ஒரு நன்மை நடந்தால் அடுத்து உனக்கு ஆப்பு தான் டா என்று கடவுள் சோதிடம் மூலமாக நமக்கு சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். அதுதான் நம் மதம் இரண்டு நிலையிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது.
நான் பார்த்த ஜாதகங்களில் ஒரு சிலருக்கு ஒரு நல்ல இடத்தில் இருக்கும் நல்ல கிரகத்தின் தசா முழுவதும் நன்மை தந்து இருக்கிறது. ஒரு சிலருக்கு கெட்ட இடத்தில் இருக்கும் தசா முழுவதும் கெடுதலும் செய்தும் இருக்கிறது. இது என் அனுபவம்.
என்ன நண்பர்களே இப்பதிவில் தசாவைப் பற்றி தந்தது போதும் என்று நினைக்கிறேன். நல்ல செய்தியுடன் அடுத்த பதிவில் பார்க்கலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
1 comment:
நாம் பிறந்த லக்கினத்தின்படி யோகாதிபதியின் தசை/புத்தி நடந்தால் நமக்கு நல்ல நேரம் என்று கொள்ளவேண்டும். அந்த நல்ல நேரத்தில், முன் ஜென்மத்தில் நாம் யார்க்கெல்லாம் நன்மை செய்தோமோ அவர்கள் நமக்கு இந்த ஜென்மத்தில் நன்மை செய்து விட்டுபோவர். உண்மையில் நல்ல நேரம் என்பது நமது முன் ஜென்ம புண்ணியங்களை அனுபவிக்கும் நேரம்.
அதேபோல துஷ்டஷ்தான அதிபதிகளின் தசா/புத்தி என்பது கெட்ட நேரம் ஆகும். அப்பொழுது பூர்வஜென்மத்தில் நாம் யாருக்கெல்லாம் தீங்கு செய்தோமோ அவர்கள் இந்த ஜென்மத்தில் நம்மை வாட்டிவதைத்து சென்று விடுவர். பூர்வ ஜென்மத்தில் ஏமாற்றி இருந்தோம் எனறால், இந்த ஜென்மத்தில் ஏமாற்றப்படுவோம். துரோகம் செய்து இருந்தால் நமக்கு துரோகம் இழைக்கப்படும்.பொதுவாக நாம் பூர்வஜென்மத்தில் செய்த பாவங்களை அனுபவிக்கும் நேரமே கெட்ட நேரம் ஆகும். கெட்ட நேரத்திலும் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் நமது பாவத்தின் அளவு குறையும்.
மேலும்,
http://maheshan.blogspot.com/2012/05/blog-post.html
Post a Comment