Followers

Tuesday, May 1, 2012

எப்பொழுது விடியும்



வணக்கம் நண்பர்களே என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்கள் கேட்கும் கேள்விகள் எனக்கு நல்ல காலம் இருக்கா இல்லையா இப்படியே போய் சேர்ந்துவிடுவேனா என்று தான் கேட்கிறார்கள் இன்னும் சில பேர் நான் இறக்கும் போதாவது நல்ல நிலையில் இருந்து இறப்பேனா என்று தான் கேள்வியாக இருக்கிறது. 

அவர்களுக்கு நான் சொல்லும் விடை இதுதான் ஒரு மனிதனின் வாழ்நாட்களை கடந்து கொண்டிருக்கும் போது அவனை வழி நடத்துவது மிக பெரிய பங்கு வகிப்பது அவனின் தசா புத்திதான். 

தசா புத்தி நல்ல நிலையில் இருந்தால் வாழ்க்கை அழகாக ஒடிக்கொண்டிருக்கும். தசா நாதன் சரியில்லை என்றால் அவன் அந்த அளவுக்கு படவேண்டும். சில தசா நாதன் இருக்கிறார்கள் எந்த புத்திநாதனின் பேச்சையும் கேட்கமாட்டார்கள் அவர்கள் இஷ்டத்திற்க்கு அவனை போட்டு தாக்கு தாக்கு என்று தாக்கி விடுவார்கள். அவர்களின் பாடு திண்டாட்டம் தான். 

இந்த மாதிரி தசாநாதனின் நடப்பு வருசத்தில் தான் மேலை கண்ட கேள்விகள் மனிதனை கேட்க தோன்றுகிறது.  ஒரு சில தசாநாதன் இருக்கிறார்கள் அவர்கள் ஒருபடி மேலே போய் கடைசி காலத்தில் தற்கொலை எண்ணத்தை உண்டு செய்துவிடுவார்கள். ஆனால் அந்த மனிதன் அந்த கஷ்டத்தை தாக்குபிடித்து இருந்துவிட்டான் என்றால் ஒரு சில காலத்திலேயே நல்ல தசாநாதனின் தசா நடக்க ஆரம்பித்துவிடும். இழந்த பொருள் அனைத்தும் கிடைத்துவிடும். பட்ட கஷ்டத்திற்க்கு வழி பிறந்துவிடும் அதுவரை நாம் பொறுமை காக்க வேண்டும்.

இன்று கூட ஒரு நபர் என்னிடம் தொடர்பு கொண்டு அவரின் ஜாதக பலனை கேட்டார் அவர் வாழ்க்கையில் அந்த பாடு பட்டுக்கொண்டு இருக்கிறார். அவரின் ஜாதகத்தில் பிறந்தவுடன் சனி திசை நடந்திருக்கிறது அதன் பிறகு புதன் தசை புதன் எட்டாம் இடத்தில் இருந்திருகிறார். அவரை உண்டு இல்லை என்று பதம்பார்த்துவிட்டது. அதன் பிறகு கேது திசை சாமியார் லேவலுக்கு வந்துவிட்டார். 

ஆனால் பாருங்கள் அவரின் கெட்ட தசை முடிய இன்னும் ஒரு வருட காலமே உள்ளது அதன் பிறகு சுக்கிரனின் தசை ஆரம்பம் ஆகிறது. சுக்கிரன் சொந்த வீட்டில் இருக்கிறார். அவருக்கு வாரி வழங்க முடிவு செய்துகொண்டு இருக்கிறார். 

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தான் கெடுதல் பலன் நடந்து கொண்டே இருந்தாலும் ஒரு சில காலங்களில் நல்ல காலங்கள் வரும். நாம் அவசரபட்டு தப்பான முடிவுக்கு வந்துவிடகூடாது. நல்ல பொழுது விடியும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.  



No comments: