வணக்கம் நண்பர்களே! நமது பதிவு மூலம் சோதிட ஆலோசனை கேட்பவர்கள் அனைவருக்கும் ஒரு கருத்தை சொல்லுகிறேன். என்னிடம் சோதிட ஆலோசனையை கேட்பவர்கள் அன்றைக்கு பிரச்சினையை வைத்துக்கொண்டு கேட்கிறார்கள்.
இந்த பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று கேட்கிறார்கள். உங்களுக்கு பிரச்சினை வந்த பிறகு நீங்கள் சோதிடரை கேட்ககூடாது. சோதிடம் என்பது எதிர்காலத்தில் வரவேற்க்கும் பிரச்சினை என்ன என்று சொல்லுவது தான் . அதை விட்டுவிட்டு அன்றைக்கு இருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண்பது கிடையாது. உங்களுக்கு பிரச்சினை வருவதற்க்கு முன்பே என்னை தொடர்பு கொண்டால் தீர்வு கிடைக்கும்.
இரண்டு நாட்கள் முன்பு என்னை ஒருவர் தொடர்பு கொண்டார் அவர் பேசகூட முடியாமல் இருக்கிறார். என்ன சொல்லுவது என்று கூட பேச வரவில்லை. அப்படி பிரச்சினையை வைத்துக்கொண்டு தீர்வு காண்பது என்பது கஷ்டமான விஷயமாக தான் இருக்கும். இருக்கின்ற ஒரு சில பிரச்சினைகளை தீர்வு காண்பது எளிது. அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்காது.
அதனால் நீங்கள் பிரச்சினை வருவதற்க்கு முன்பே சோதிட ஆலோசனை கேட்பது நல்லது.
இலவச சோதிட ஆலோசனை கேட்பவர்கள் அனைவரும் பிளாக்கில் மெம்பர் ஆனவுடன தான் சோதிட பலன் சொல்லுவது என்று சொன்னவுடன் இலவச சோதிட ஆலோசனை பக்கமே யாரும் வரவில்லை.
இலவசமாக சோதிடம் பார்க்ககூடாது என்ற எண்ணத்தில் தான் மெம்பராக வேண்டும் என்று சொன்னேன். தட்சணை வைக்காமல் சோதிடம் பார்த்தால் உங்களுக்கு பாவம் வந்து சேரும் என்ற எண்ணத்தில் தான் அந்த அறிவிப்பு செய்தேன்.
கட்டண சோதிடத்திற்கு இப்பொழுது பல பேர் வந்துவிட்டார்கள். கட்டண சோதிடத்திற்க்கு வருபவர்கள் பணத்தை அனுப்பிவிட்டுதான் பலன் கேட்க வேண்டும் என்று பல பேர் நினைக்கிறார்கள். ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக நீங்கள் ஆலோசனை கேட்டுவிட்டு பணத்தை அனுப்பலாம். உங்களுக்கு நான் ஆலோசனை தருகிறேன். கால தாமதம் வேண்டாம். உங்கள் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஆறாவது வீட்டு தசாவை பற்றி பார்த்து வந்தோம் அந்த தகவல் போதுமென்று நினைக்கிறேன். அடுத்தது வேறு வீட்டு தசாவை பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். ஒரே வீட்டை மட்டும் பார்த்தால் உங்களுக்கு வெறுப்பு அடைந்துவிடும். அடுத்து எந்த வீட்டை பற்றி எழுதலாம் என்று எனக்கு சொல்லுங்கள். உங்கள் ஆவலை பார்த்து அந்த வீட்டு தசாவை பற்றி எழுதுகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
ராஜேஷ்சுப்பு.
3 comments:
please explain 7th house
sir please explain 3rd house
thank u for 7th house lessons
Post a Comment