Followers

Monday, July 16, 2012

ஆடி அமாவாசை



இறைவன் படைப்பில் எந்த நாளும் நல்ல நாள் தான் இருந்தாலும் அவருக்கு உகந்த நாளகாக கருதப்படும் நாளில் இறைவனின் சக்தி இந்த பூமியில் அதிகமாக வெளிப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும் போது வரும் ஆடி அமாவாசை மிக சிறந்த நாளாக காணப்படுகிறது.

அவ்வகையில் 18-7-2012 புதன் அன்று ஆடி அமாவாசை வருகிறது. புதன் கிழமை காலை 9:41 க்கு துவங்கி 19-7-2012 வியாழன் 10:23 க்கு முடிவடைகிறது. அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்வது உகந்ததாகும்.

உங்கள் முன்னோர்களின் சக்தி தான் உங்களை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். உங்களுக்கு வரும் பிரச்சினைகளை தீர்ப்பதில் முதலில் நிற்பது உங்கள் முன்னோர்களின் சக்தியாக தான் இருக்கின்றன.

உங்கள் முன்னோர்களின் ஆசி உங்களுக்கு முழுவதும் கிடைக்க ஒவ்வொரு அமாவாசையும் விரதம் இருந்து மனமுருகி உங்கள் முன்னோர்களின் ஆசியை வேண்டுங்கள். அமாவாசையில் மிகவும் முக்கிய அமாவாசையாக ஆடி அமாவாசை வருகிறது. மாத அமாவாசையில் உங்களின் பணி காரணமாக விரதம் இருந்திருக்கமுடியாது அவ்வாறு விரதம் இருக்காதவர்களுக்கு இந்த ஆடி அமாவாசை நல்ல வாய்ப்பு.

பல பேர்களுக்கு முன்னோர்களின் திதி தெரியாது. அந்த திதியை ஞாபகம் வைத்து இருக்க மாட்டார்கள் அல்லது திதி தெரியாமல் இருந்திருக்கும் அவ்வாறு இருப்பவர்களும் இந்த ஆடி அமாவாசையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

நான் கடந்த வாரம் தாம்பரத்தில் ஒரு சோதிட வாடிக்கையாளரை சந்தித்தேன் அவர் என்னை கொண்டுவந்து விடுவதற்க்காக அவருடைய காரில் என்னை ஏற்றிக்கொண்டு வந்தார் அப்பொழுது அவர் என்னிடம் சோதிட விஷயமாக பேசிக்கொண்டு வந்தார் அப்பொழுது அவர் கேட்டார் முன்னோர்கள் ஆத்மா ஏதாவது ஒரு உயிர் எடுத்துவிட்டால் நாம் செய்யும் தர்பணம் அவர்களுக்கு வீண்தானே எப்படி அவர்கள் நமக்கு நன்மை செய்வார்கள் என்று கேட்டார்.

நான் சொன்னேன் முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் போது நாம் தருகின்ற பிண்டமும், பசு மாட்டிற்க்கு கொடுக்கின்ற கீரையும் ஏழைகளுக்கு கொடுக்கின்ற அன்னதானமும் நம் முன்னோர்கள் எங்கோ பிறந்து இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கின்ற உணவு நாம் தர்பணம் செய்த புண்ணியத்தால் கிடைக்கிறது. இதைப்பற்றி  கருட புராணத்தில் விரிவாக உள்ளது.

நாமே பல நேரங்களில் திடீர் என்று எல்லையற்ற மகிழ்ச்சி நிலைக்கு செல்லலாம் மனது நல்ல மகிழ்ச்சி நிலையில் இருக்கும். இது நமக்கு யாரோ கொடுக்கின்ற தர்பணத்தால் தான் நடைபெறுகிறது.

விபத்துக்களில் சிக்கி தவிக்காமல் உங்களை காப்பாற்றுவது உங்கள் முன்னோர்களின் ஆசி தான் இதனை நீங்களே உணர்ந்து இருக்கலாம். ஆடி அமாவாசை விரதம் இருப்பதை பற்றி உங்கள் நண்பர்களின் குடும்பத்திற்க்கும் தெரியபடுத்துங்கள். உங்களின் உறவுகாரர்களுக்கும் தெரியபடுத்துங்கள். நான் பலபேர்களுக்கு சொல்லும் போது அவர்கள் பாதி பேர் இதைப் பற்றி தெரியாமல் அறியாமையில் இருக்கிறார்கள்.

இந்த பூமியில் மனிதராக பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் இறந்த பின் அவன் ஆத்மாவிற்க்கு அவனின் இரத்த உறவுதான் திதி கொடுப்பார்கள். சில மனிதருக்கு கடவுளே திதி கொடுக்கும் வைபவம் இருக்கின்றது அது  அவர்களின் கர்ம காரியங்களுக்கு ஏற்ப அமையும். கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் இறைவனே அவரின் சீடருக்கு திதி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது நாம் அறிந்ததே.

நீங்களும் நன்றாக விரதம் இருந்து உங்களின் முன்னோர்களின் ஆசியை பெற்றுடுங்கள். அவர்களை விட உங்களுக்கு வரும் இன்னல்களை தடுக்க கூடிய சக்தி வேறு யாரும் இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பதிவு... விளக்கங்கள் அருமை...

பகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள்...