வணக்கம் நண்பர்களே நாம் ஆறாம் வீட்டு அதிபதியின் தசாவை பார்த்து வந்தோம். அதன் மூலம் வரும் பிரச்சினைக்கு என்ன தீர்வு அதற்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்றும் பார்த்தோம்.
பொதுவாக ஆறாம் அதிபதி தீமை தருவது முன் ஜென்மத்தின் கர்மாவில் தான் நடக்கிறது.முன் ஜென்மம் கர்மாவை குறைக்கு வழி உண்டா என்றால் அதற்கும் ஒரு பரிகாரம் இருக்கிறது நீங்கள் பக்தியுடன் இதை செய்தால் கண்டிப்பாக நல்ல பலனை நீங்கள் அடையலாம்.
என்னடா கர்மாவை குறைப்பதற்க்கு பரிகாரம் இருக்கிறதா இது எல்லாம் கதை என்று நீங்கள் நினைக்கலாம். முன்ஜென்மத்தின் கர்மாவை இந்த ஜென்மத்தில் நீங்கள் குறைக்கவில்லை என்றால் வேறு எப்பொழுது இதனை தீர்ப்பது அதனால் இந்த ஜென்மத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள தான் அருமையான படைப்பாக நீங்கள் இந்த பூமிக்கு வந்துள்ளீர்கள் என்பதை நீங்கள் உணருங்கள்.
வெள்ளத்தில் ஒரு மனிதன் மாட்டிக்கொள்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அவனுக்கு அந்த வெள்ளத்தில் ஒரு மரகட்டை கிடைத்தால் அந்த மனிதன் அந்த வெள்ளத்தில் இருந்து தப்பித்துவிடுவான்.
ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் திக்கற்ற காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். அந்த வெள்ளத்தில் இருக்கும் மனிதனுக்கு ஒரு மரகட்டை கிடைத்தால் அதனை கொண்டு அவன் பிழைத்துவிடலாம். அந்த மரக்கட்டை தான் ஜாதகம் அதனைக்கொண்டு நீங்கள் பிழைத்துவிடலாம்.
வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒன்று இந்த மதத்தில் இருக்கிறது அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அடுத்தவரையும் காப்பாற்றுங்கள். இப்பொழுது எல்லா மதத்திலும் இதனை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளியில் காட்டிக்கொள்வது கிடையாது.
வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியாது. உங்கள் ஜாதகத்தில் அதற்கு வழி இருக்கிறது அந்த ஜாதகத்தை நீங்கள் நல்ல முறையில் அலசி ஆராய்ந்து அல்லது ஒரு சோதிடரிடம் உங்கள் ஜாதகத்தை காட்டி அதற்கு நீங்கள் பரிகாரம் தேடினால் உங்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விடை காணலாம்.
நான் வெறும் சோதிடம் மட்டும் நடத்தினால் நீங்கள் அதனை படித்து அடுத்தவரிடம் அப்படியே மனபாடம் செய்ததை ஒப்பித்துவிடுவீர்கள் அவர்கள் அதனை கேட்டு 80 வருடம் வாழ்பவன் பாதியிலேயே போய் சேர்ந்துவிடுவான். அதற்கு என்ன தீர்வும் நாம் கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் அவனை நம்மால் காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது அதற்கு நீங்கள் படிக்கும் ஏட்டு கல்வி போதாது அனுபவ கல்வி மற்றும் உங்களின் பக்தி இது அனைத்தும் சேர்ந்தால் தான் சோதிடம் மூலம் மனிதனுக்கு உள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும். அப்படி இல்லை என்றால் நீங்கள் கொடுக்கும் பரிகாரம் அவனுக்கு எமனாக கூட அமையும்.
நான் பல பேரை பார்த்து இருக்கிறேன் இருக்கின்ற அனைத்து சோதிட புத்தகத்தை எல்லாம் படிப்பது அதனை அவர்களின் ஜாதகத்தோடு ஒப்பிட்டு பார்த்துவிட்டு எனக்கு அந்த தோஷம் இருக்கின்றது எனக்கு அது எல்லாம் சரிபட்டுவராது என்று நீங்களாகவே நினைத்துக்கொண்டு கவலைபடுகிறது. இதுவும் ஒரு மாதிரியான பிரச்சினை தான்.
உங்கள் ஜாதகத்தை நீங்கள் படித்துவைத்திருக்கும் சோதிட அறிவை சேர்த்து பார்த்துவிட்டு அதன் மாதிரி உங்களுக்கு வாழ்க்கையில் நடைபெறுகிறதா அல்லது நடைபெறவில்லையா என்று பார்த்துவிட்டு நீங்கள் முடிவை எடுங்கள்.
அதற்கு என்ன தீர்வு எங்கு இந்த விஷயத்திற்க்கு தீர்வு இருக்கிறது என்று தேடுங்கள் அப்பொழுது உங்களுக்கு தீர்வு கிடைக்கும் அதன் மூலம் நீங்கள் நினைப்பது கிடைக்கும்.
இப்பொழுது விஷயத்திற்க்கு வருகிறேன் கர்மா பாவத்தை குறைக்க வழி என்ன என்று பார்க்கலாம். வாரந்தோறும் வரும் சனிகிழமை அன்று உங்கள் ஊரில் இருக்கும் ஒரு தெய்வத்திற்க்கு அல்லது உங்கள் குலதெய்வத்திற்க்கு போய் பஞ்சகவ்யத்தால் அந்த தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். ஒன்பது வாரம் சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.
பஞ்சகவ்யம் என்பது பசுமாட்டியிருந்து உற்பத்தியாகின்ற பால்,நெய்,தயிர்,சாணம்,கோமியம் சேர்த்து கலந்து செய்யவேண்டும். இது ஒரே பசுமாட்டியிருந்து எடுக்கப்படவேண்டும்.
ஒரே பசுமாட்டியிருந்து எடுத்தால் அதற்கு வீரியம் நன்றாக இருக்கும். பலவித மாட்டியிருந்து எடுத்து கலக்ககூடாது. நல்ல பக்தியுடன் இதனை செய்யுங்கள். செய்யும் போது எனது கர்மா பாவத்தை குறைக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டு செய்யுங்கள்.
இந்த தகவலை உங்களை சார்ந்தவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். ஆறாம் வீட்டு தசா நடப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பதில்லை அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்தவர்களுக்கு இதனை தெரியப்படுத்தும் போது உங்கள் பாவம் வெகுவிரைவில் குறையும்.
இந்த தகவலை உங்களை சார்ந்தவர்களுக்கும் தெரியபடுத்துங்கள். ஆறாம் வீட்டு தசா நடப்பவர்கள் மட்டும் செய்ய வேண்டும் என்பதில்லை அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அடுத்தவர்களுக்கு இதனை தெரியப்படுத்தும் போது உங்கள் பாவம் வெகுவிரைவில் குறையும்.
கண்டிப்பாக கைமேல் பலன் இதற்கு உண்டு.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
Good one thanks
//* Ananthamurugan said...
Good one thanks *//
வருக வணக்கம் உங்கள் நண்பருகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
Post a Comment