Followers

Friday, May 3, 2013

குழந்தை பாக்கியம் பகுதி 4


வணக்கம் நண்பர்களே !
                     குழந்தை பாக்கியம் பகுதி பார்த்து பல நாட்கள் சென்றுவிட்டது. அதனால் இன்று ஒரு ஜாதகத்தை பார்க்கலாம். இது ஒரு ஆணிண் ஜாதகம்.

லக்கினம் ரிஷபம். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் சென்று அமர்ந்துவிட்டார். லக்கினாதிபதி விரையத்தில் இருக்கிறார். லக்கினாதிபதி விரையத்தில் அமருவதும் தவறான ஒன்று அடிக்கடி செலவு வைத்துவிடுவார். உடலிலும் குறையை வைத்துவிடுவார். பூர்வபுண்ணியாதிபதியாகிய புதன். சூரியன் மற்றும் கேதுவுடன் அமர்ந்துவிட்டார். புதன் எந்த ஒரு கிரகத்தோடு சேருகிறதோ அந்த தன்மையை பெற்றுவிடும்.

புதன் பத்தாவது வீட்டில் அமர்ந்தாலும் சூரியன் மற்றும் கேதுவோடு சேருவதால் அவர் பாபராக மாறிவிட்டார். புதன் குழந்தை பாக்கியத்தை தரமுடியவில்லை. குரு பார்த்தால் புதனின் தோஷம் விலகிவிடும் என்றால் அதுவும் விலகவில்லை. இங்கே குருவும் சிக்கலில் இருக்கிறார்.ராகு மற்றும் செவ்வாய்யோடு சேர்ந்து இருக்கிறார். இவர் பார்வை பட்டும் புண்ணியம் இல்லை என்றாகிவிட்டது.

லக்கினாதிபதியை குரு பார்க்கிறார் அதனால் அனைத்திலும் வென்றுவிடுவார் என்று பார்த்தால் சுக்கிரனை பார்க்கிறர். சுக்கிரன் குருவை பார்த்து நீ ஏன்டா என்னை பார்க்கிறாய் நீ பார்த்தால் நான் சரியாகிவிடுவேனே என்று நினைப்பில் அவர் இருக்கிறார்.

ஐந்தாவது வீட்டில் அமரும் கிரகத்தின் நிலையை பார்த்தால் அதுவும் மோசமாக இருக்கிறது. சனியும் சந்திரனும் சேர்ந்து ஐந்தாவது வீட்டில் அமர்ந்திருக்கிறது குழந்தை பாக்கியத்திற்க்கு தடையை அதிகமாக ஏற்படுத்துகிறது.

சனியின் பார்வை இரண்டாவது வீட்டிற்க்கு கிடைக்கிறது. இரண்டாவது வீடு என்பது குடும்பத்தில் உள்ள நபர்களை காட்டும் இடம். ஒரு குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்தில் ஒரு நபர் கூடுகிறார் அல்லவா. குடும்பத்தில் ஒரு நபரை கூட்டகூடாது என்ற கணக்கில் சனிபகவான் செயல்படுகிறார்.

அங்கும் பிரச்சினை உருவாகியுள்ளது. ஒரு மனிதனுக்கு கெடுதல் காலம் வந்ததால் இப்படி தான் வரும் எந்தவிதத்திலும் அவன் தப்பிக்ககூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு கிரகங்கள் ஆடும்.

மருத்துவரிடம் இவர் ஆலோசனை கேட்டு இருக்கிறார். மருத்துவர் உயிர்அணுக்கள் குறைவாக இருக்கிறது என்று சொல்லி இவருக்கு மருந்தும் பரிந்துரைத்து இருக்கிறார். பல டாக்டரிடம் காண்பித்தும் முன்னேற்றம் இல்லை. மருத்துவ செலவே பல லட்சம் செய்திருக்கிறார். என்ன செய்வது லக்கினாதிபதி பனிரெண்டாவது இடத்தில் நிற்கிறது அல்லவா அதனால் மருத்துவ செலவு அதிகம் ஏற்பட்டு இருக்கிறது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 


No comments: