Followers

Wednesday, May 22, 2013

மாந்திக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே !
                     ஜாதகத்தில் மாந்தி அமர்ந்து அந்த கிரகம் தோஷத்தை ஏற்படுத்துமானால் அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

மாந்தியின் நிலையை தமிழ்நாட்டு சோதிடத்தில் அந்தளவுக்கு எடுத்துக்கொள்வதில்லை. கேரளாவில் இதனை மிக முக்கியமாக சோதிடத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். மாந்தி ஆவி உலகத்திற்க்கு காரகம் வகிப்பவர் ஆவார். கேரளாவில் மாந்தீரிகத்திற்க்கு அதிகமாக ஆவியை பயன்படுத்தி மாந்தீரிகம் செய்வார்கள். அதனால் கேரளாவின் சோதிடத்தில்  மாந்தியின் பங்கு முக்கியமாக எடுத்துக்கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மாந்தீரிகம் அந்தளவு கிடையாது. அதனால் மாந்தியையும் கணக்கில் எடுத்துக்கொள்வது கிடையாது.

மாந்திக்கு எப்படி பரிகாரம் செய்வது என்பதை பார்க்கலாம்

மாந்திக்கு பரிகாரம் செய்வதற்க்கு உங்களின் ஊரில் இருக்கும் சிவன் கோவில் செல்லுங்கள். நீங்கள் செல்லும நேரம் காலண்டரில் குளிகை நேரத்தை பார்த்துவிட்டு அந்த நேரத்தில் செல்லுங்கள்.

சிவன் கோவில் சென்று விநாயகரை வணங்கிவிட்டு சிவன் கோவிலை 18 முறை வலம் வாருங்கள். 18 முறை வலம் வந்த பிறகு சிவனை தரிசனம் செய்து உங்களின் பேரில் அர்ச்சனை செய்துக்கொள்ளுங்கள். பிறகு அம்பாளையும் தரிசனம் செய்த விட்டு செய்யுங்கள். நவக்கிரகத்திற்க்கு சென்று சனிபகவானுக்கு தீபம் ஏற்றவிட்டு நேராக உங்களின் வீட்டிற்க்கு செல்லுங்கள். மாந்தியால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.

மாந்தி என்பது சனியின் புதல்வன் ஆவார் அதனால் சனிக்கு செய்தாலே போதும். மாந்திக்கு என்று தனியாக வழிபாடு கிடையாது. திருநாரையூர் சௌந்தரேஸ்வரர் கோவிலில் சனிபகவான் தன் குடும்பத்தோடு காட்சி தருகிறார் அவரை வணங்கினால் நல்லது. இந்த கோவிலைப்பற்றி தகவலை நமக்கு தந்த மதுரை சேர்ந்த கண்ணன் அவர்களுக்கு நன்றி.

சிதம்பரத்தில் இருந்து குமராட்சி வழியாக காட்டுமன்னார்குடி செல்லும் வழியில், சிதம்பரத்தில் இருந்து சுமார் 17 கி.மி. தொலைவிலும், காட்டுமன்னார்குடியில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவிலும் திருநாரையூர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. சிதம்பரம் - காட்டுமன்னார்குடி (வழி குமராட்சி) சாலையில் செல்லும் பேருந்துகளில் சென்று திருநாரையூர் விலக்கு நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து ஒரு கி.மீ. நடந்தால் இத்தலத்தை அடையலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment: