வணக்கம் நண்பர்களே!
பல பிளாக்கை படித்துவிட்டு அதில் எழுதியிருக்கும் சோதிட சம்பந்தப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டு யாரும் உங்களின் மனதைப்போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம்.
எனக்கு வரும் போன்கால்களில் இந்த சந்தேகத்தை வைத்துக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள். எனக்கு இரண்டாம் வீட்டில் இந்த கிரகம் இருக்கிறது. இரண்டு வீட்டிற்க்கு தீயகிரகங்களின் பார்வை இருக்கிறது எனக்கு அதனால் பிரச்சனை வருமா என்று தான் கேட்கிறார்கள். சோதிடர்களின் வேலை இப்படி எழுதுவது தான் அதனால் கிரகங்களை மட்டும் நம்பி வாழ்க்கையை ஓட்டமுடியாது. அதற்கு மேல் கடவுள் இருக்கிறார். அவரின் கருணையால் எப்படிபட்ட துன்பங்களையும் நாம் கடந்துவிடலாம்.
நீங்கள் கிரகங்களின் மேல் வைக்கும் நம்பிக்கையை கடவுள் மேல் வைக்கவேண்டும். கிரகங்கள் இல்லை என்று சொல்லவில்லை அது எல்லாம் ஒரு எல்லை வரைக்கு தான் அதற்கு மேல் கடவுள் இருக்கிறார். சோதிடர்களின் வேலை இதனைப்பற்றி எழுதவேண்டும் அப்பொழுது தான் மக்கள் தேடிவருவார்கள். எப்படிபட்ட சோதிடர்களும் அனைத்தையும் கணித்துவிடமுடியாது. அனைத்தையும் சொல்லிவிடமுடியாது.
எனது நண்பர் பாபு கூட திருவண்ணாமலையில் என்னிடம் சொன்னார். சனியும் குருவும் இந்த சோதிடர்களின் கையில் கிடந்து படாதபாடுபடுகிறது என்றார். நான் கூட சில நேரங்களில் நினைப்பது உண்டு சனி, குரு இல்லை என்றால் நாம் எப்படி பிழைப்பை நடத்துவது. நல்ல வேலை ஆண்டவன் இந்த கிரகத்தை வைத்தானே என்று நினைப்பது உண்டு.
குரு பெயர்ச்சியைப் பற்றி எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். திரும்புகின்ற பக்கம் எல்லாம் குரு பெயர்ச்சி பலன்கள் தான் இருக்கிறது. இதில் நான் வேறு எழுதவேண்டுமா பழைய பதிவுகளில் கோச்சாரப்பலனை எழுதியுள்ளேன் அதில் உள்ளது தான் பலன். கோச்சார பலன்கள் எல்லாம் ஒரு 10 சதவீதம் நடந்தாலே மிகப்பெரிய ஆச்சரியமான ஒன்று தான். இதனைப்பற்றி கவலைக்கொள்ள வேண்டாம்.
சோதிடத்தை பாருங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை ஒரு அளவோடு சோதிடத்தை பார்க்க வேண்டும். தொட்டதற்க்கு எல்லாம் சோதிடம் தான் என்றால் அப்புறம் நீங்கள் எதற்கு கடவுள் எதற்கு. பழைய காலத்தில் இரண்டு கட்டங்களை வைத்து பார்த்து சரியாக பலனை சொன்னார்கள் இன்று பத்து கட்டத்திற்க்கு மேல் வைத்துக்கொண்டு பலனை தவறாக சொல்லுகிறார்கள். அனைத்தையும் பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நன்றி நண்பர்களே !
அன்புடன்
ராஜேஷ்சுப்பு.
2 comments:
http://www.nilavaithedi.in
Yes sir. Thanks for info.
Post a Comment