Followers

Wednesday, May 8, 2013

குழந்தையும் தெய்வமும்



வணக்கம் நண்பர்களே !
                    அனைவரும் ஏதோ ஒரு வழியில் ஆன்மீகப்பயிற்சி பெற நினைப்பீர்கள். இந்த மந்திர ஜெபங்கள் செய்வதற்க்கு என்று பல வழிகளை நமது ஆன்மீக அன்பர்கள் சொல்லி இருப்பார்கள். அதனை கடைப்பிடித்து நீங்களும் பயிற்சியை செய்துவருவீர்கள். இதற்கு எல்லாம் உங்களுக்கு எந்த வித முன்னேற்றமும் இல்லை என்றால் ஒரு புது வழியை சொல்லுகிறேன் முயற்சி செய்து பாருங்கள்.

நாம் அமாவாசை பெளர்ணமி போன்ற நாட்களை பயன்படுத்துவோம். மலை மீது அமர்ந்து மந்திர ஜெபம் அல்லது தியானம் செய்வோம். இது எல்லாம் நல்ல எண்ணங்களை தோன்றுவித்து அதன் வழியாக நாம் கடவுளை எளிதில் காணமுடியும் என்ற காரணத்தால் இதனை பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் ஒரு மந்திர ஜெபம் செய்யும் பொழுது உங்களின் வீட்டில் இருக்கும் குழந்தையை அருகில் அமரச்செய்துவிட்டு மந்திரஜெபத்தை ஆரம்பித்தால் நீங்கள் காணவேண்டிய தெய்வம் உங்களை உடனே நாடிவரும். 

குழந்தையை பூஜையறையில் அமரச்செய்யும் பொழுது ஏதாவது வம்பு செய்யும் என்று நினைத்தால் நீங்கள் பூஜை செய்வதற்க்கு முன்னால் குழந்தையை பூஜையறையில் அமரச்செய்யுங்கள் ஐந்து நிமிடம் அமர்ந்தாலே போதும். நீங்கள் பூஜை ஆரம்பிக்கும்பொழுது அந்த குழந்தையை வெளியில் விட்டுவிட்டு ஆரம்பிக்கலாம்.

குழந்தையும் தெய்வமும் ஒன்று தான் என்று நம் முன்னோர்கள் சொன்னது உண்மை தான். நல்ல ஆன்மீகவாதிகளை பார்த்தால் அவர்களின் செயல் அனைத்தும் குழந்தை தனம் போல் இருக்கும். குழந்தைகளின் மனது தூய்மையான ஒன்று அதனால் தான் தெய்வங்கள் உடனே வருகிறது. நாமும் குழந்தைகள் மனது போல் நமது மனதை மாற்றினால் ஆன்மீகவாழ்க்கையில் நல்லநிலையை அடையமுடியும்.

தெய்வங்களை அடைய உள்ள எளிமையான வழிகளை அனைத்தையும் ஆன்மீகவாதிகள் சொல்லுகிறார்கள். நீங்கள் அதனை கடைபிடித்து வரும்பொழுது நீங்களும் ஆன்மீகவாதிகள் தான். ஒரு படியை எடுத்துவைப்பது உங்களின் வேலை அந்த ஒரு படியில் உங்களின் கால்தடத்தை பதித்துவிட்டால் அனைத்தை படியையும் அந்த கடவுள் உங்களுக்கு ஏதோ ஒரு உருவத்தில் காட்டிக்கொடுத்துவிடுவார். அதனை பயன்படுத்தி நீங்கள் அனைத்து படியையும் கடந்துவிடலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: