Followers

Wednesday, May 29, 2013

ஆன்மீக அனுபவங்கள் 92


வணக்கம் நண்பர்களே!
                    பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு கேட்கிறார் ஒரு சாதாரணமான மனிதனாக இருந்துக்கொண்டு எப்படி நினைத்து கூட பார்க்கமுடியாத வேலைகளை செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். (அவர்கள் சொல்லும் வேலை முடிந்ததால் அப்படி கேட்க தோன்றுகிறது என்று நினைக்கிறேன்).

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அதிகமான சக்தி இருக்கிறது. அதனை நீங்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். நான் அனைவரையும் பார்க்கும் பொழுது ஒரே மாதிரியாக தான் பார்க்கிறேன். யாரையும் வித்தியாசப்படுத்தி பார்ப்பது கிடையாது. ஒருத்தர் பணக்காரர் ஒருத்தர் ஏழை என்று பார்ப்பது கிடையாது. ஒருவன் ஒரு துறையில் வெற்றி அடைந்திருக்கிறான் என்றால் அந்த துறை மட்டும் தான் அவன் வெற்றி அடைவான் என்று கிடையாது அந்த துறைப்பற்றி சரியாக புரிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு அவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. வேறு துறையும் சரியாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டால் அவன் கண்டிப்பாக அடுத்த துறையிலும் வெற்றி பெறமுடியும். 

அனைவராலும் அனைத்திலும் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை உள்ளவன். அதனால் அனைவரையும் ஒரே போல் பார்க்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் அனைவரையும் வேறுபாட்டுடன் பார்க்கிறீர்கள். உங்களுக்கு புரிந்துக்கொள்ளும் தன்மை குறைவாக இருக்கிறது. உங்களைப்பற்றி நீங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொள்கிறீர்கள். ஒரு புத்தனுக்கு நடந்தது உண்மை என்றால் அது உங்களுக்கும் நடைபெறும் என்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். அப்பொழுது மட்டுமே நீங்கள் மேல்நோக்கி செல்லமுடியும்.

ஆன்மீகவாதி என்றால் அந்த வேலையை தான் செய்ய வேண்டும் அவர்கள் வேறு ஏதும் செய்ய கூடாது என்ற பார்வையில் பார்ப்பது தவறான ஒன்று. நாம் தினமும் செய்யும் செயலில் ஆன்மீகம் ஒரு பகுதி என்று எண்ண வேண்டும். அந்தந்த வேலை செய்யும் பொழுது அதில் மட்டும் மனதை ஒருநிலைப்படுத்தினால் போதுமான ஒன்று அனைத்தையும் வென்றுவிடலாம்.

நான் பூஜையறையில் அமரும்பொழுது அதில் மட்டும் தான் கவனம் செலுத்துவேன். அப்பொழுது மட்டுமே அனைத்து காரியங்களும் வெற்றியை தரும். நீங்கள் பூஜையறையில் அமரும்பொழுது கூட மனதை அலையவிட்டால் ஒன்றும் நடைபெறாது. ஒரு சாதாரணமான ஒரு ஆள் போல் உங்களைப்போல் அனைத்திலும் ஈடுபட்டுக்கொண்டு ஆன்மீகத்திலும் ஈடுபடவேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம். மிகப்பெரிய ஆன்மீகவாதி போல் காட்டிக்கொண்டு நடக்கவேண்டும் என்று நான் விரும்பவில்லை.

ஆன்மீகத்தில் இப்படியும் இருக்கலாம் என்று உங்களுக்கு வாழ்ந்து காட்டிவிட்டால் நீங்களும் ஆன்மீகத்தில் ஈடுபட்டு ஒரு நல்ல வாழ்க்கையை வாழலாம் அல்லவா. ஒரு செயலில் வெற்றி பெறுவதற்க்கு அந்த இடத்தில் அந்த கணத்தில் வாழ்வது மட்டும் தான். அதனை நான் கடைபிடிக்கும்பொழுது வெற்றி தேடிவருகிறது. 

சரியான நேரத்தில் சரியான வழியில் செயல்படுத்துவேன். காலம் என்பது ஆன்மீகத்திற்க்கு மிக முக்கியம். இந்த நேரத்தில் இதனை செய்தால் நடக்கும் என்று கணக்கு போட்டு செய்வது எனது பழக்கம். அதனை கடைபிடிப்பேன். நீங்கள் என்ன செய்வீர்கள் நல்ல நேரத்தை விட்டு விட்டு கெட்ட நேரத்தில் செய்வீர்கள் உங்களுக்கு எப்படி வெற்றி வரும்.

நினைப்பது தான் பிழைப்பை கெடுக்கும் என்று சொல்லுவார்கள். நான் எதைப்பற்றியும் நினைக்காமல் இருக்கும்பொழுது அடுத்தவர்களுக்கு காரியம் கைகூடும்.அதாவது எண்ணங்கள் அற்ற நிலையில் அனைத்தும் கைகூடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

SUBBU SIR,
WE ARE ALL ORDINARY HUMAN LIVES BUT YOU ARE A HOLY PERSON AND READY TO GUIDE US TOWARDS THE GOD, THAT IS WHY WE ARE ALL PRAISING YOUR IN ATTITUDE AND TRY TO FOLLOW YOU,....

rajeshsubbu said...

வணக்கம் சார் அனைவரும் மனிதர்கள் தானே தவிர பெரிய மகான்கள் கிடையாது. நான் அனைவரையும் மனிதராக மதிக்கிறேன். நீங்களும் மனிதராக மதியுங்கள் அது போதும். மனிதர்களாக நாம் அனைவரையும் பார்க்கும் நேரத்தில் கண்டிப்பாக எந்த வித பிரச்சினையும் வராது.