வணக்கம் நண்பர்களே!
ஒவ்வொரு நாளும் வரும்பொழுது தான் அந்த நாளைப்பற்றி நமக்கு தெரியவரும். இன்று மாட்டுப்பொங்கல் என்றவுடன் மாடுகளைப்பற்றி ஞாபகம் வந்தது அதனைப்பற்றி எழுதவேண்டும் என்று இப்பதிவை உங்களுக்கு தருகிறேன்.
ஒவ்வொரு வீடுகளிலும் பசு மாட்டை வளர்த்து அந்த வீட்டிற்க்கு தேவையான பால் மற்றும் அதில் இருந்து பெறப்படும் பொருட்களை வீட்டிற்க்கு பயன்படுத்திக்கொண்டனர். இப்பொழுது இது கிராமங்களில் கூட கிடையாது. எல்லாம் நவீனமாயம் என்று இருக்கின்ற மாடுகளை எல்லாம் விற்றுவிட்டு பாக்கெட் பால் வாங்கி குடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
கிராமபுறங்களில் வீட்டிற்க்கு ஒரு மாடாவது இருக்கும். இன்றைய நாளில் கிராமபுறங்களில் அந்த ஊருக்கு ஒரு மாடு இருந்தாலே பெரிய விசயமாக இருக்கின்றது.
எல்லாம் நவீனமாகிவிட்டது என்று எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். ஒரு மாட்டில் இருந்து பாலை கறந்து காபியோ அல்லது டீயோ போட்டு குடித்தால் உண்மையில் உண்மையான பாலின் அருமை என்ன என்று உங்களுக்கு புரியும்.
நான் என்ன தான் வெளியில் சுற்றினாலும் கிராமத்தில் இருக்க எனக்கு மிகவும் பிடிக்கும். எனது வீட்டில் எனக்கு தெரிந்த நாள் முதல் எங்களின் வீட்டில் பசு மாடு வளர்த்து வளர்கிறோம். இப்பொழுதும் என்னிடம் பசு மாடு இருக்கின்றது. எனது தோஷம் மற்றும் வீட்டில் உள்ள எல்லா தோஷங்களை போக்க நான் வளர்த்து வருகிறேன்.
அதற்கு பணிவிடை செய்து எனது தோஷத்தை போக்கிக்கொள்கிறேன். உங்களுக்கும் உங்களால் பசு மாடு வளர்க்கும் நிலையில் இருந்தால் தாராளமாக பசு மாடு ஒன்றை வாங்கி பராமரித்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
மாட்டுப்பொங்கலை கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Enga vettil pasu irukku adhan arumai neenga sollithan therikiradhu.
Post a Comment