Followers

Wednesday, January 28, 2015

காவடிபூஜை விளக்கம்


வணக்கம் நண்பர்களே!
                      காவடிபூஜை செய்ததைப்பற்றி நேற்று சொல்லிருந்தேன். இது முருகனுக்கு செய்யும் ஒரு விழா என்றும் சொல்லிருந்தேன். 

பல வருடங்களுக்கு முன்பு எங்கள் ஊரில் இருந்து கூட நடந்தே பழனி மலைக்கு செல்வார்கள். இப்பொழுது அப்படி யாரும் செல்வதில்லை. அந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை அப்படியே நடத்தவேண்டும் என்பதற்க்காக தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கிறோம். 

வருடந்தோறும் பழனிக்கு செல்லும் பக்தர்களை அழைத்து வீட்டில் வைத்து பூஜை நடத்துவோம். பெரும்பாலும் கோவில் பூசாரிகள் வீட்டிற்க்கு வந்து இந்த பூஜையில் கலந்துக்கொள்வார்கள். 

உங்களுக்கு தரும் உபயோகமான டிப்ஸ் 

காவடிபூஜையில் அன்னதானம் மிக முக்கியமாக நடைபெறும் ஒரு நிகழ்வு. அன்னதானம் செய்யும்பொழுது பொரியல் செய்வதற்க்கு பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் இந்த இரண்டு பொரியலும் மிக முக்கியமானவை. என்ன இதில் இருக்கிறது என்று கேட்கிறீர்களாக.

ஐந்து வகை பொரியல் செய்வோம். பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் பொரியல் கண்டிப்பாக இதில் இடம்பெறவேண்டும். பரங்கிகாய் கடையில் வாங்கும்பொழுது முழுமையான காயாக பார்த்து வாங்கி அதனை சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும். ஒரு சிலர் வெட்டி இருக்கும் பரங்கிக்காயை வாங்கி வந்து சமைப்பார்கள். அது தவறான ஒன்று. முழு காயாக வாங்கி வந்து சமைக்கவேண்டும்.

பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் முருகனுக்கு மிகவும் பிடித்த உணவு வகைகள். நீங்கள் முருகனுக்கு விரதம் இருந்து சமைக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அன்று நீங்கள் பரங்கிகாய் மற்றும் வாழைக்காய் பொரியல் செய்து உங்களின் விரத சாப்பாட்டை முடியுங்கள் முருகன் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் செய்துக்கொடுப்பார்.

நாங்கள் பூஜை செய்தால் அதிக கவனம் இப்படிப்பட்டவைகளில் செலுத்துவோம். எந்த கடவுளுக்கு என்ன பிடிக்கும் எப்படி பூஜை நடக்கவேண்டும் என்பதை பார்த்து பார்த்து செய்வோம். சின்ன சின்ன விசயத்தில் கூட நாங்கள் தவறுகள் செய்வதில்லை. எங்களால் முடிந்தளவு சிரத்தை எடுத்து செய்வோம். இப்படி சிரத்தை எடுத்து செய்யும்பொழுது தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

இதனை உங்களிடம் சொல்லுவதே நீங்கள் பூஜை செய்யும்பொழுது நல்ல முறையில் செய்யவேண்டும் என்பதற்க்காக மட்டுமே சொல்லுகிறேன்.செய்வதை ஒழுங்காக செய்துவிட்டால் அதன் பிறகு நடப்பது நடக்கட்டும் என்று இருந்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: