வணக்கம் நண்பர்களே!
இன்று எங்களின் வீட்டில் காவடி பூஜை. இது என்ன புதுமையாக இருக்கின்றது என்று நினைக்கிறீர்களா. தை பூசத்திற்க்கு பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்களுக்கு பூஜை செய்யும் ஒரு விழா.
தை பூசம் என்பது மிகவும் சிறப்பான ஒரு விழாவாக முருகனுக்கு கொண்டாடுவார்கள். முருகனுக்கு காவடி எடுத்துக்கொண்டு நடைபயணமாக பல பக்தர்கள் செல்வார்கள். அவர்களை அழைத்து அவர்களின் பாதங்களுக்கு பூஜை செய்து வீட்டிற்க்குள் அழைத்து அந்த காவடியை எங்களின் பூஜை அறையில் வைத்து மிகப்பெரிய அளவில் வேலுக்கு அபிஷேகம் செய்து பிறகு அனைவருக்கும் அன்னதானம் செய்வோம்.
எங்களின் முன்னோர்களின் வழியாக வந்த ஒரு பூஜை இது. தொன்றுதொட்டு செய்யும் பூஜை வருடம் தோறும் தை பூசத்திற்க்கு முன்பு செய்கின்ற பூஜை. எங்களின் பகுதியில் மிக பிரபலமாக செய்வார்கள்.
பூஜை முடிந்த பிறகு அவர்கள் பழனி வரை சென்று வருவதற்க்கு தேவையான பண உதவி மற்றும் பொருள் உதவி என்று நிறைய செய்வோம். மிக சுத்தமாக அதே நேரத்தில் மிகுந்த கவனத்தில் கொண்டு இந்த பூஜையை செய்வது எங்களின் கடமை.
நாங்களும் இந்த நாளில் விரதம் இருந்து பூஜை செய்வோம். முருகனே நேரில் எங்களின் வீட்டிற்க்கு வருவதுபோல் இருக்கும். இதனைப்பற்றி பூஜை முடிந்த பிறகு ஒரு பதிவு தருகிறேன். இன்று அனைவரும் மனதில் முருகனை நினைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment