வணக்கம் நண்பர்களே!
நீங்கள் ஏன் பொறுமையாக பிறருக்கு செய்துக்கொடுக்கிறீர்கள். வருபவர்களை உடனே மேலே தூக்கிவிடலாமே என்று கேட்டார்.
என்னை தேடி வருபவர்களுக்கு முதலில் பணம் வாங்காமல் எதையாவது செய்துக்கொடுக்கவேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன். என்னை சந்தித்த நேரத்தில் இருந்து வருபவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று தான் நினைப்பேன். ஒரு சிக்கல் ஒன்று ஏற்படுகிறது அதனை போக்க காலதாமதம் ஏற்படும்பொழுது காலம் எடுத்துவிடுகிறது.
மனிதன் வாங்கி வந்த வரம் என்று ஒன்று இருக்கிறது. வாங்கி வந்த வரம் என்றால் முன்ஜென்மத்தில் அவன் செய்த பாவகணக்கு. வாங்கி கட்டிய வரம் என்றும் ஒன்றும் இருக்கிறது. இந்த ஜென்மத்தில் அவன் செய்த பாவம். இந்த இரண்டும் ஒருத்தனின் தலைவிதியை தீர்மானிக்கிறது.
இந்த இரண்டு பாவத்தையும் நீக்கி அவனுக்கு நல்லது செய்வதற்க்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. ஒரு சிலருக்கு உடனே நல்லது நடந்துவிடும். ஒரு சிலருக்கு காலத்தாமதம் ஏற்பட்டுவிடுகிறது.
வாங்கிகட்டிய வரத்தில் ஏற்படும் பாவக்கணக்கை தீர்ப்பது என்பது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கும். வாங்கி கட்டிய வரத்தில் ஆத்மா மற்றும் பாதிப்படையாமல் அவனின் உடலும் பாதிப்படைந்துவிடும். வாங்கிவந்த வரத்தில் ஆத்மா மட்டும் பாதிப்படையும். வாங்கி கட்டிய வரத்தால் அவனின் மூன்று உடலும் பாதிப்படையும்.
மூன்று உடல் என்றால் மனித உடல், சூட்சம சரீரம், ஆத்மா இது மூன்றும் மூன்று உடல். இதனை சரி செய்வதற்க்கு கொஞ்ச கால தாமதம் ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் என்னை சந்தித்த உடன் உடனே நல்லது நடந்துவிடாது. கொஞ்சம் காலம் எடுக்கும். அது வரை அவன் விதி பொறுமையாக இருக்கவேண்டும். ராஜேஷ்சுப்பு ஏமாற்றுகிறார் என்று அவன் பாேய்விட்டால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது. என்னிடம் இருக்கின்றவரைப்பற்றி தான் நான் கவலைப்படுவேன் தவிர போகிறவரைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன்.
ஒரு மனிதனுக்கு நிறைய பிரச்சினை ஏற்படும்பொழுது அவனுக்கு ஒரு நாளில் எல்லாம் சரியாகிவிடாது. கொஞ்சகாலம் எடுக்கும். அது இயற்கையின் நியதி.
தோல்வி ஏன் ஏற்பட்டது என்று சிந்தித்து பார்த்தால் வெற்றி பெறுவது எளிது என்று ஹட்லரின் வாசகத்தை தான் சொல்லமுடியும். தோல்விக்கான காரணத்தை ஆராயும்பொழுது பல வில்லங்கம் வெளியில் தெரியவரும். வில்லங்கத்தை சரிசெய்ய கொஞ்ச காலம் எடுக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment