கிரகங்களின் பாதிப்பிற்க்கு பரிகாரம் என்ற பகுதியில் ஏற்கனவே ஒரு கருத்தைப்பற்றி பார்த்தோம். அடுத்து ஒரு கருத்தைப்பற்றி பார்க்கலாம். கிரகங்களின் பாதிப்பு என்ற பகுதியில் வரும் கருத்துக்கள் ஒன்றுமே இல்லாமல் வாழ்க்கை வெறுத்து போய் வாழும் மனிதர்களுக்காக எழுதும் ஒரு பகுதி. வெறுப்பு மட்டுமே எஞ்சிய நிலையில் உள்ளவர்களுக்கு இது பயன்படும். நல்ல நிலையில் இருப்பவர்கள் இதனை பயன்படுத்தவேண்டாம். பிரச்சினை என்று வரும்பொழுது இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ஆடம்பரமாக வாழ நினைக்காதீர்கள். எளிமையாக இருங்கள். உங்களை ஆடம்பரமாக மாற்றிக்கொண்டால் உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்பு கூட தவறுவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும்.
எனக்கு ஏற்பட்ட கஷ்டமான சூழ்நிலையால் எளிமையாக இருப்பது தான் சிறந்த வழி என்பதை கற்றுக்கொண்டேன். நாம் படித்த படிப்பு மற்றும் சேர்த்த பணம் கற்ற வித்தை அனைத்தும் நம்மிடம் இல்லாமால் இருந்தால் எப்படி இருப்போமோ அந்த நிலையை மனதிற்க்குள் கொண்டு வந்தால் எளிமையாக இருக்கலாம்.
எளிமையாக இருந்தால் நம்மிடம் ஒன்று இல்லை என்று மக்கள் நினைப்பார்கள். அவர்கள் நினைத்தால் நினைக்கட்டும் என்று இருந்துவிடுவது நல்லது.
பொதுவாக நான் எளிமையாக இருப்பதை பார்த்துவிட்டு பல நண்பர்கள் என்னிடம் ஒன்றும் இல்லை கருதுவார்கள். அதாவது இவர் ஆன்மீகத்தைப்பற்றி ஒன்றும் தெரியாது என்று நினைப்பார்கள்.ஆன்மீகத்திற்க்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று கூட நினைப்பார்கள். அதனைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை காரணம் நம்மிடம் இருக்கும் எளிமை இன்னும் பல மடங்கு உயர்த்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எளிமையாக இருக்கும்பொழுது எந்த கிரகங்களும் உங்களை பாதிப்பதில்லை. எந்த வித சிக்கலும் உங்களுக்கு வரபோவதில்லை.வறுமையாக இருப்பது எளிமையாக இருப்பது அல்ல. எளிமையாக இருப்பது என்பது உங்களிடம் எத்தனை விசயங்கள் இருந்தாலும் அதனை பெரிதாக கருதாமல் இருப்பது. அதனை வெளியில் அப்பட்டம் பாேட்டு காட்டாமல் இருப்பது தான் எளிமை.
நீங்கள் எளிமையாக இருக்கும்பொழுது உங்களுக்கு பலமடங்கு அதிக சக்தியை இறைவன் கொடுப்பார். அந்த சக்தி உங்களின் நிலை பலமடங்கு மாற்றிவிடும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:
Nalla karuthu,nanri sir.
Post a Comment