வணக்கம்!
இன்று காலையில் மெயிலை பார்க்கும்பொழுது ஒருவர் கடன் பிரச்சினையைப்பற்றி எழுதியுள்ளதை பார்த்தேன். கடன் பிரச்சினைக்கு தீர்வைப்பற்றி கடந்த கால பதிவில் எழுதியுள்ளேன். மீண்டும் அதனைப்பற்றி பார்க்கலாம்.
சோதிடத்தில் ஆறாவது வீட்டு அதிபதியின் துணையோடு நமக்கு வரும் கடன் நம்மை பிரச்சினையில் மாட்டிவிடுகிறது. கடன் சுமை மரணவேதனையை விட கொடுமையானது. செலவினத்தை குறைத்தாலே கடன் ஏற்படாது என்று ஒரு சிலர் சொல்லுவார்கள். அடிப்படை தேவைக்கே பிரச்சினை என்று வரும்பொழுது கடன் வாங்கி தான் ஆகவேண்டும்.
பத்து பேரிடம் நீங்கள் கடன் வாங்கிவிட்டால் அந்த பத்து பேரின் எண்ண தாக்குதலில் இருந்து நீங்கள் மீறி வேலை செய்வது என்பது பெரிய விசயமாக இருக்கும்.தொழில் அதிபர்கள் என்று நாம் வேலை செய்யும் ஆட்கள் எல்லாம் கடனை வாங்கிவிட்டு தான் என்னை தேடி வருவார்கள். அவர்களை கடன் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வைத்து இருந்தேன். தற்பொழுது அதனை நான் செய்வதில்லை. பணத்தோடு வந்தால் தான் நான் சேர்த்துக்கொள்ளவதாக இருப்பதால் இந்த பிரச்சினை வருவதில்லை.
கடன் பிரச்சினையை தீர்க்க ஆயிரம் வழிபாட்டு முறைகளை ஆன்மீகத்தில் சொல்லிவிடுவார்கள். வருபவர்களுக்கு ஏதாவது ஒன்றை சொல்லவேண்டும் அல்லவா. அந்த காரணத்தால் பல வழிபாட்டு முறைகள் இருக்கும்.
சோதிடத்தில் ஆறாம் வீட்டு அதிபதியின் துணையோடு கடன் வந்தாலும் செவ்வாய் கிரகம் கையெழுத்து போடாமல் கடன் ஏற்படுவதில்லை. செவ்வாய் கிரகத்திற்க்குரிய முருகன் வழிபாட்டை மேற்க்கொள்ளலாம்.
செவ்வாய்கிழமை அன்று காலையில் எழுந்து குளித்துவிட்டு நமது அம்மனிடம் வேண்டுதல் வைத்தால் உங்களுக்கு ஏற்பட்ட கடனில் இருந்து விடுபடவழி செய்யும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment