Followers

Thursday, May 21, 2015

பெற்றோர்க்கு


வணக்கம்!
          பெற்றோர்க்கு என்ற எழுதிய பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் பாராட்டினார்கள். அதே நேரத்தில் பல கேள்விகளும் வந்தன. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் தன் பிள்ளைகளுக்கு தானே கொடுக்கவேண்டும் என்று சம்பாதிக்கிறோம் என்றார்கள்.

கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை தன் வாரிசுக்கு தான் கொடுக்கவேண்டும்.அனைத்தையும் கொடுக்கும்பொழுது அந்த பையனுக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டு கொடுக்கவேண்டும் என்று சொன்னேன். ஒன்றும் தெரியாத பையனாக வளர்ந்துவிடுகிறார்கள். பணம் என்றால் என்ன என்று கற்றுக்கொடுக்க அவனுக்கு பயிற்சி கண்டிப்பாக தேவை அப்பொழுது தான் உங்களின் சொத்துக்களை பாதுகாத்து சேர்த்து வைப்பான்.

ஒரு சில பெற்றோர்களும் சரியில்லை என்றே சொல்லவேண்டும். ஒன்றுமே செய்யாமல் இருந்துவிடுகிறார்கள். நல்ல விசயத்தையும் சொல்லி தருவதில்லை. சொத்தையும் சேர்த்து வைப்பதில்லை.

ஒரு சில பெற்றோர்கள் தன் புத்திக்கு செயல்படுவதில்லை. அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் வழிகாட்டுதலில் செயல்பட்டு தன் வாரிசுக்கு துரோகமும் இழைத்துவிடுகிறார்கள். தன் அண்ணன் தம்பி அல்லது அக்கா தங்கை பேச்சை கேட்டு அவர்களின் குடும்பத்தை கவனிப்பதில்லை. இப்படியும் பல பேர்கள் இருக்கிறார்கள்.

பொதுவான கருத்து 

தன் குடும்பம் தன் பிள்ளைகள் என்று இருக்கவேண்டும். நீங்கள் பிறர் குடும்பத்தை கவனிக்க போய்விட்டால் உங்களின் குடும்பம் போய்விடும். நான் சந்திக்கும் அனைத்து குடும்பத்திலும் அவர்களின் குழந்தைகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுப்பேன். அதற்கு காரணம் இருக்கிறது. உங்களின் பிள்ளைகள் தான் வாழும்பொழுதும் வயதான காலத்திலும் உங்களை காப்பாற்றவேண்டும். உங்களின் இறப்புக்கும் உங்களின் பிள்ளைகள் தான் கொள்ளிவைக்கவேண்டும். நீங்கள் இறந்த பிறகு உங்களுக்கு தர்பணம் திதி எல்லாம் உங்களின் பிள்ளைகள் தான் செய்யவேண்டும். உங்களின் உறவினர்கள் வந்து இதனை எல்லாம் செய்யமுடியாது.

வாழும்பொழுதும் இறப்பிற்க்கும் இறப்பிற்க்கு பிறகும் உங்களின் பிள்ளைகள் தான் உங்களுக்கு அனைத்தையும் செய்ய முடியும் என்பதால் உங்களின் பிள்ளைகளுக்கு நான் அதிகம் முக்கியதுவம் கொடுப்பது உண்டு.

உங்களின் குடும்பத்தை மட்டும் கவனித்து வந்தாலே போதும். நீங்கள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தீர்கள் என்பதையும் சொல்லிவிடவேண்டும். அவர்களுக்கும் நல்ல கற்றுக்கொடுத்துவிட்டீர்கள் என்றால் பல தலைமுறைகளுக்கு அது செல்லும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: