வணக்கம்!
சக்தியைப்பற்றி எழுதி நிறைய நாட்கள் சென்றுவிட்டன. ஒரு நண்பர் மீண்டும் அதனைப்பற்றி கேட்டார். உடனே அதனைப்பற்றி ஒரு பதிவை தருகிறேன்.
கோவில்களில் நந்தவனம் என்று ஒன்றை வைத்து இருப்பார்கள். சாமிக்கு தேவையான பூக்களை அங்கு இருந்து எடுத்து பூஜைக்கு பயன்படுத்தவேண்டும் என்பதற்க்காக வைத்திருந்தனர். இன்றைய காலத்தில் நந்தவனம் என்பது எல்லாம் இருக்கின்றதா என்பது நீங்கள் தான் சொல்லவேண்டும்.
நந்தவனத்தில் விடியற்காலை நான்கு மணிக்கு எல்லாம் பூக்களை பறித்துவிடவேண்டும் என்பது விதிமுறை. அந்த பூக்களை வாழை நாரில் மாலை கட்டி போடவேண்டும். உதிரிபூக்களாவும் பயன்படுத்தவேண்டும். அனைத்தும் இயற்கையாகவே அமையவேண்டும் என்று அப்படி எல்லாம் செய்துவந்தார்கள்.
இன்றைய காலத்தில் நமது கோவில்களில் நந்தவனம் கிடையாது. அப்படியே நந்தவனம் இருந்தாலும் அதனை பராமரிக்க முடியாமல் விட்டுவிடுகிறார்கள்.
நாம் அனைவரும் கடையில் தான் பூக்களை வாங்கி பயன்படுத்துகிறோம். காலத்தின் கோலம் என்று இதனை நாம் கருதினாலும். நீங்கள் பூ அல்லது மாலை வாங்கும்பொழுது அது இந்துக்களின் கடையில் இருந்து வாங்கப்படவேண்டும். பெரும்பான்மையான பூ கடைகள் முஸ்லீம் கடைகளாக இருக்கின்றது.
முஸ்லீம் கடையில் பூ வாங்கினால் முஸ்லீம் காலையில் அவர்களின் கடவுளை தொழுதுவிட்டு பூ வேலையை ஆரம்பிப்பார்கள். அவர்களின் சக்தி அந்த பூவிலும் இருக்கும். அதனை நாம் வாங்கி பயன்படுத்தும்பொழுது நமது தெய்வத்திற்க்கு ஏற்றுக்கொள்ளாது.
இந்துக்களின் கோவில் என்றால் அது இந்துக்களின் பூ கடையில் வாங்கி பயன்படுத்தும்பொழுது அது நல்லவிதமான சக்தியை நாம் பெறமுடியும். நீங்கள் பெரும்பாலும் உதிரிபூக்களாக பயன்படுத்துவது நல்லது. கடவுளுக்கும் மிகவும் விருப்பமாக அமையும்.
தற்பொழுது நண்பரை சந்திக்க கோயம்புத்தூர் பயணம் கிளம்பிவிட்டேன். நாளை கோயம்புத்தூரில் இருப்பேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment