வணக்கம்!
என்னை சந்திக்கும்பொழுது நண்பர்கள் ஏன் சார் பதிவு அதிகம் எழுதுவது இல்லை நிறைய பதிவுகளை எங்களுக்கு தாருங்கள் என்று சொல்லுவார்கள். நான் எழுதும் பதிவுகள் அனைத்தும் எனது எண்ணத்தில் இருந்து எடுத்து எழுதிய பதிவுகள். நான் என்ன நினைக்கிறேனோ அதனை எழுதுவது எனது பழக்கம். நிறைய கருத்துக்களை சிந்தனை செய்து அதனை பயன்படுத்தி அதில் வெற்றி பெற்ற கருத்துக்களை எழுதிவருகிறேன்.
இதனை சும்மா வந்து படித்துவிட்டு சென்றால் அதன் உள்ளே இருக்கும் கருத்துக்களை நீங்கள் பயன்படுத்த மாட்டீர்கள். வாழ்விற்க்கு தேவை என்று நினைக்கும் ஆட்கள் எப்படியும் என்னை தேடி வந்து இதனை எல்லாம் கேட்டு தெரிந்த கொண்ட பிறகு அதனை பயன்படுத்துவார்கள். வாழ்க்கை நல்லமுறையில் அமையவேண்டும் என்று நினைப்பவர்கள் என்னை தேடி வரட்டும் அவர்களுக்கு நான் சொல்லிக்கொடுக்கிறேன். சாதாரணமான கருத்துக்களை மட்டும் பதிவில் எழுதுகிறேன். குறைவான கருத்துக்கள் மட்டும் பதிவில் வரும்.
தொழில் நண்பர்களிடம் நான் சொல்லும் கருத்து இதனை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் அனைவருக்கும் அரசாங்கம் விடுமுறை கொடுத்து விடுகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று கிருத்துவர்கள் வழிபாடு நடத்தவேண்டும் என்று விடுமுறையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்துவது தவறான ஒன்று. நான் கிருத்துவர்களுக்கு எதிராக இதனை எழுதுகிறேன் என்று நினைக்கவேண்டாம்.
ஞாயிற்றுக்கிழமை அன்று நீங்கள் வழக்கம் போல் வேலை செய்தால் அல்லது அந்த நாளை முழுமையாக நீங்கள் பயன்படுத்தினால் அதில் நீங்கள் பெரிய வெற்றியை பெறலாம்.
சூரிய கிரகம் தன் சக்தியை அதிகம் தரும் நாளில் நீங்கள் ஒய்வாக இருப்பது நல்லது அல்ல. நான் தொழில் செய்யும் நண்பர்களுக்கு எல்லாம் சொல்லும் வார்த்தை ஞாயிற்றுக்கிழமை அன்று அலுவலகத்தை திறந்து வையுங்கள் என்று சொல்லுவேன். வியாபாரம் நடைபெறாவிட்டாலும் பரவாயில்லை காலையில் மட்டுமாவது திறந்து வையுங்கள் என்று சொல்லுவேன். இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நீங்களும் செய்து பாருங்கள் அல்லது உங்களின் நண்பரிடத்தில் சொல்லுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment