வணக்கம்!
ஒரு நண்பர் என்னிடம் எனக்கு வெளிநாட்டில் வேலை வேண்டும் என்று கேட்டுருந்தார். ஒரு சில நாட்கள் சென்றபிறகு அவரிடம் குருவாயூர் கோவில் சென்று வரவேண்டும் வாருங்கள் செல்லலாம் என்று சொல்லிருந்தேன். அவர் நீண்ட தூரம் இருக்கின்றது என்னால் வரமுடியாது சார் என்று சொல்லிவிட்டார்.
வெளிநாட்டிற்க்கு செல்லலாம் குருவாயூர் நீண்டதூரம் என்று சொல்லுகின்றார். இது அவர் சொல்லவில்லை அவரின் கர்மா அப்படி சொல்லவைக்கின்றது. நாம் என்ன செய்யமுடியும் என்று விட்டுவிட்டேன்.
ஒருவருக்கு ஒரு வேலை நடக்கவேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட நபரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்வது உண்டு. இந்த பழக்கத்தை அனைத்து ஆன்மீகவாதிகளும் செய்வார்கள். இதில் என்ன இருக்கின்றது என்று பார்த்தால் அதில் ஒரு உண்மை இருக்கும்.
பாதிபேர் இவனுக்கு வேலை இல்லை. நம் காசில் ஊரை சுத்துகிறான் என்றும் நினைப்பது உண்டு. இதில் இருக்கும் சூட்சமத்தை எல்லாம் அறிந்து இருந்தால் எதற்க்கு நம்மை தேடி வரபோகின்றார்கள்.
பாதிபேர் இவனுக்கு வேலை இல்லை. நம் காசில் ஊரை சுத்துகிறான் என்றும் நினைப்பது உண்டு. இதில் இருக்கும் சூட்சமத்தை எல்லாம் அறிந்து இருந்தால் எதற்க்கு நம்மை தேடி வரபோகின்றார்கள்.
பாக்கியஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய வீடு பயணத்தையும் காண்பிக்கும். ஒரு நீண்ட தூர பயணத்தை செய்யவித்து அதன் வழியாக அவர்களுக்கு ஏற்படும் தடையை நிவர்த்தி செய்து அவர்கள் கேட்டதை நிறைவேற்ற வைப்பதற்க்கு இப்படி பயண ஏற்பாட்டை செய்வோம்.
ஒவ்வொரு சோதிடர்களும் அவர்களின் வாடிக்கையாளர்க்கு சொல்லுவது உங்களுக்கு காரியம் நடைபெறவேண்டும் என்றால் பல ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் என்று சொல்லுவார்கள். அதில் உள்ள உண்மை இது தான். பல ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் நீங்கள் நினைப்பது நடக்கும்.
திருவண்ணாமலை செல்லுகிறேன். திரும்பி வந்தபிறகு உங்களுக்கு பதிவை தருகிறேன்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
1 comment:
Nalla seythi
Post a Comment