வணக்கம்!
ஆன்மீகம் என்று வந்தாலே அதில் முதலில் இடம் பெறுவது அன்னதானமாக தான் இருக்கும். அன்னதானம் செய்வது ஒருவிதத்தில் நல்லது என்றாலும் நமக்கு செல்வவளம் வரவேண்டும் என்றால் அதற்கு என்று ஒரு சில விசயங்களை செய்யவேண்டும்.
பணம் நம்மிடம் சேரவேண்டும் என்றால் பணத்தை கொஞ்சம் வெளியில் விடவேண்டும். அதாவது பணத்தை பிறர்க்கு கொடுக்கவேண்டும். அப்படி கொடுத்தால் பணம் நம்மிடம் சேரும்.
பணம் வெளியில் கொடுத்தால் நம்மிடம் பணம் வரும். பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவவேண்டும். அதே நேரத்தில் இருக்கின்ற அனைத்து பணத்தையும் கொடுத்துவிடகூடாது. பத்து சதவீதத்திற்க்கு தர்மம் என்று கொடுத்தால் போதும்.
இது எல்லாம் ஒரு வித விதி. நாம் எந்தளவுக்கு கொடுக்கிறோமோ அந்தளவுக்கு பணம் நம்மிடம் வருவது உண்மை. இதனை நான் பல பேருக்கு சோதனை வழியாக செய்து பார்த்து சொல்லுகிறேன்.
பணம் நிறைய சம்பாதிக்கவேண்டும் என்றால் இதனை எல்லாம் செய்யவேண்டும். அதே நேரத்தில் நமது குழந்தைகள் நன்றாக வாழவேண்டும் என்றாலும் இந்த மாதிரியான பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment