வணக்கம்!
பாக்கியஸ்தானம் என்னும் சொல்லக்கூடிய ஒன்பதாவது வீட்டை பற்றி பார்த்து வருகிறோம். ஒரு மனிதனுக்கு ஏற்படக்கூடிய தர்மசிந்தனையும் இந்த வீட்டை வைத்து தான் கணிக்கப்படுகிறது.
தர்மத்தைப்பற்றி நான் ஏற்கனவே சொல்லிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனது கஷ்டத்தை கூட தர்மம் செய்து தான் வெற்றிபெற்றேன். கஷ்ட காலத்தில் கூட இருக்கின்ற காசை வைத்து தர்மம் செய்து இருக்கிறேன்.
திருநங்கைகளுக்கு முடிந்தளவு தர்மம் செய்து இருக்கிறேன். எனது கஷ்டத்தை போக்கியது திருநங்கைகள் என்று சொன்னால் அது தான் உண்மை. அவர்களின் ஆசியை பெற்றதால் மட்டுமே கஷ்டத்தில் இருந்து மீள முடிந்தது.
நான் ஒரு சில முருகன் கோவிலுக்கு செல்வது உண்டு. அங்கு யாசகம் கேட்பவர்கள் உண்மையில் முருகனின் மீது பற்றுக்கொண்டு சந்நியாசியாக இருப்பவர்கள். அவர்களுக்கு என்று நிறைய தர்மம் செய்து இருக்கின்றேன்.
சேட்டுகளைப்பற்றி நான் சொல்லிருக்கிறேன். ஒரு ஆன்மீகவாதி என்று அவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் முடிந்தளவுக்கு அவர்கள் உதவி செய்வார்கள். என்ன காரணம் என்றால் அவர்களுக்கு காரியம் நடைபெறவேண்டும் என்பதால் தடை இல்லாமல் நடக்க ஆன்மீகவாதிகளுக்கு உதவி செய்வார்கள். போலி ஆன்மீகவாதிகள் என்று தெரிந்து கூட அவர்கள் எதையும் பார்க்காமல் உதவி செய்வார்கள்.
ஆன்மீகவாதி என்ற அடையாளத்தில் இருந்துக்கொண்டு உதவி கேட்கிறான் என்று எதையும் பார்க்காமல் செய்வார்கள். அவர்களின் வெற்றிக்கு இது தான் முக்கியமாக இருக்கின்றன. நம் ஆட்கள் ஆன்மீகவாதியை அடித்து பிடிங்கிவிடுவான் அல்லது ஏமாற்றுவான்.
தர்மம் செய்யதாய என்பது தான் கணக்கு. யாருக்கு செய்தாய் என்பது கிடையாது. தர்ம சிந்தனை இருந்தால் ஒன்பதாவது வீடு உங்களுக்கு வழிவிட்டு நல்ல வாழ்க்கையை உங்களுக்கும் உங்களின் குடும்பத்திற்க்கும் கிடைக்கும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment