வணக்கம்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாளை நமது அம்மன் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.விநாயகர் சதுர்த்தியை பற்றி எழுங்கள் என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டு அனுப்பிருந்தார்.
இன்றைக்கு நடக்கும் விழாக்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்ம ஊரில் இல்லை. நமது வசதி வாய்ப்பு மற்றும் இன்று வளர்ந்திருக்கும் தகவல் தொடர்புவசதிகளால் இந்த விழாக்கள் எல்லாம் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி நன்றாக கொண்டாடுங்கள் ஆனால் பிறர்க்கு தொந்தரவு கொடுக்காதவாறு கொண்டாடுங்கள்.ஒவ்வொரு சிறிய கிராமத்திலும் குறைந்தது மூன்று பிள்ளையார்கள் கூட வைத்திருக்கிறார்கள். ஐம்பது வீட்டிற்க்கு மூன்று பிள்ளையார்கள். நமது மக்களுக்கு அவ்வளவு பக்தி.
விநாயகர் சதுர்த்தி அன்று மட்டும் விநாயகரை வணங்கிவிட்டு அத்தோடு விட்டுவிடகூடாது. தொடர்ச்சியாக விநாயகரை வணங்கி வாருங்கள். நல்ல நிலையை அடையலாம். குறிப்பாக செல்வவளத்தில் நல்ல முன்னேற்றம் அடையலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment