வணக்கம்!
பாக்கியஸ்தானத்தைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம். பாக்கியஸ்தானம் என்பது கெடும்பொழுது தான் ஒருவன் அதிகமாக அலைக்கழிக்கபடுவான். அதனைப்பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம்.
பித்ருதோஷம் என்று சொல்லுகிறார்கள் அல்லவா அதனை படித்து தான் பார்த்திருப்போம். அதனை அனுபவிக்கிறவன் அல்லது அனுபவித்துவிட்டு வந்தவனுக்கு தான் அதனைப்பற்றி உண்மையில் தெரியவரும்.
இளம்வயதில் இவர்கள் அலையாத இடம் இல்லை என்று சொல்லலாம். எந்த ஒரு வேலைக்கு சென்றாலும் அந்த வேலையில் இருந்து இவர்களுக்கு ஒரு பைசா கூட ஆதாயம் என்பது இருக்காது. இவர்களை வைத்து வேலை வாங்கிவிட்டு அடுத்தவர்கள் சம்பாதித்துவிட்டு சென்றுவிடுவார்கள்.
எனக்கு கூட இப்படிப்பட்ட தோஷம் இருந்தது நான் எங்கு சென்றாலும் அங்கு எனக்கு ஒரு ஆதாயமும் இருக்காது. என்னை வைத்து அவர்கள் முடிந்தளவுக்கு சம்பாதித்துவிடுவார்கள். பல பேர்களின் வாழ்விற்க்கு அடித்தளம் அமைத்தது என்னுடைய உழைப்பாக இருந்தது. அதில் இருந்து ஒரு பைசா நான் சம்பாதித்தது கிடையாது.
பல இடங்களில் நான் சும்மா சாப்பாட்டிற்க்கு வேலை செய்தேன் என்று தான் சொல்லவேண்டும். என்னுடைய பாக்கியஸ்தானம் அந்தளவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தது. அதனால் ஏற்பட்ட பாதிப்பு இப்படி என்னை படுத்தி எடுத்தது.
ஒரு சில காலங்களுக்கு பிறகு தான் நமது கர்மா எல்லாம் தொலைந்து நல்ல நிலைக்கு வரமுடிந்தது. நாம் வேலை செய்து கொடுத்தது எல்லாம் பின்னால் நமக்கு புண்ணியமாக சேர்ந்தது.உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருந்தால் பிறர்க்கு ஏன் உழைக்கிறோம் எதற்கு உழைக்கிறோம் என்று தெரியாது ஆனால் பிற்காலத்தில் அது மிகப்பெரிய யோகமாக மாறிவிடுகிறது என்பது மட்டும் உண்மை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment