Followers

Wednesday, July 13, 2016

கோச்சாரபலன்கள்


வணக்கம்!
          கோச்சாரப்பலன்களைப்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. தசாநாதன் தான் உங்களுக்கு முக்கியம் என்று நான் பலமுறை நான் பதிவில் சொல்லிருக்கிறேன். ஒரு சிலருக்கு மட்டும் இந்த கோச்சாரபலன்கள் அதிகம் நடைபெறுகிறது.

கோச்சாரப்பலன்கள் நடைபெறுவதற்க்கு காரணம் அவர் அவர்களின் விதி என்று சொன்னாலும் அவர்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் உண்மை என்ன என்று தெரியும். அது என்ன உண்மை என்றால் தசாநாதன் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதால் மட்டுமே அப்படி நடக்கும்.

உங்களின் ஜாதகத்தில் தசாநாதன் நிலைமை சரியில்லை என்றாலும் இப்படி நடக்கும் அல்லது அதிகப்படியான தோஷம் ஜாதகத்தில் இருந்தால் ஜாதகத்தில் தசாநாதன் நன்றாக வேலை செய்யாது. தோஷம் முடிந்த பிறகு தான் தசாநாதன் வேலை செய்ய ஆரம்பிக்கும்.

உங்களுக்கு தசாநாதன் வேலை செய்யவில்லை என்று நீங்கள் நினைத்தால் அதனை சரி செய்யும் முயற்சியில் இறங்குங்கள். அதனை எல்லாம் சரி செய்யமுடியாது எனக்கு கோச்சாரபலன்கள் மட்டும் தான் வேணும் என்று நினைத்தால் ஒவ்வொரு கோச்சார பெயர்ச்சிக்கும் முன்பே நீங்கள் அந்த கிரகத்திற்க்கு உரிய வழிபாட்டை மேற்க்கொண்டு விடுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: