Followers

Sunday, July 31, 2016

சூரியன்


ணக்கம்!
          சூரியன் ஒருவருக்கு மறைந்தால் என்ன நடக்கும் என்பதை கடந்த சூரியன் பதிவில் சொல்லிருந்தேன். சூரியன் ஒருவருக்கு நன்றாக இருந்தால் அந்த நபருக்கு அரசாங்க வழியில் நல்லது நடக்கும்.

அரசாங்க ஊழியர்கள் என்று எடுத்துக்கொண்டாலே அவர்களுக்கு சூரியன் கிரகம் நன்றாக இருக்கு்ம். சோதிடம் உண்மை என்று உரைக்க அரசாங்க ஊழியர்களில் ஜாதகத்தை எடுத்து பார்த்தாலே புரியும். சூரியன் நல்ல நிலைமையில் அவர்களுக்கு இருக்கும்.

அரசாங்க ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் ஒரு சில ஜாதகர்களுக்கு சூரியன் நன்றாக இருக்கும். அவர்கள் அரசாங்கம் வழியில் ஏதாே ஒரு வழியில் நன்றாக சம்பாதிப்பார்கள். 

ஒரு சிலருக்கு ஒரு மாதத்தில் மட்டும் பிரச்சினை அதிகம் இருக்கும் அவர்களுக்கு அந்த மாதத்தில் கோச்சாரப்படி சூரியன் இருக்கும் வீடு சரியில்லை என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.

சூரியனை வைத்து எல்லாம் யார் பலன் சொல்லுகின்றார்கள் அனைத்தையும் பார்த்தால் ஒரு சில நேரத்தில் நன்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் ஜாதகத்தை எடுத்து சூரியன் எங்கு இருக்கின்றது என்று பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: