Followers

Sunday, July 24, 2016

சூரியன்


வணக்கம்!
          ஒருவருக்கு சூரிய கிரகம் நன்றாக இருந்தால் அவர் ஆத்மா நன்றாக இருக்கும். அதாவது நல்ல நிலையில் இருக்கும். சூரியன் சரியில்லை என்றால் ஆத்மா நன்றாக இருக்காது.

ஆன்மீகத்தில் ஆன்மசாதனை செய்பவர்களுக்கு தான் இதனைப்பற்றி தெரியும். ஆன்மசாதனையில் சக்தியை எடுப்பவர்களுக்கு இதனைப்பற்றி நன்றாக தெரிந்துக்கொள்ளமுடியும்.

சூரியன் நன்றாக இருந்தால் அவர்களுக்கு சக்தி எந்த நேரமும் இருக்கும். சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருந்தால் அவர்களுக்கு ஆன்மாவின் சக்தி அடிக்கடி குறைந்து மறுபடியும் ஏறும். 

சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு இப்படிப்பட்ட நிலை இருக்கும். அதாவது மறைவுஸ்தானத்தில் இருந்தால் அடிக்கடி நோயும் ஏற்படும்.

அடிக்கடி சோர்வு ஏற்படுவது போல் இருக்கும். மறுபடியும் சகஜநிலைக்கு வரும். இது எல்லாம் கொஞ்சம் உணர்வு பூர்வமாக இருப்பவர்களுக்கு தெரியும். இரண்டு கால்களிலும் இறக்கை கட்டி பறப்பவர்களுக்கு எல்லாம் தெரியவதற்க்கு வாய்ப்பு இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: