Followers

Sunday, July 3, 2016

வாழ்க்கை ஈஸி


வணக்கம்!
         எதற்குமே நேரம் என்ற ஒன்று இருக்கின்றது. நம்ம ஆட்கள் பரிகாரம் செய்ய சொன்னால் கூட அதற்கும் நேரம் இருக்கின்றது. அந்த நேரத்திற்க்கு நாம் காத்து இருக்கவேண்டும். காலம் கனியும்பொழுது சரியான நேரத்தில் அடித்து அவர்களுக்கு கொடுப்பது உண்டு.

உங்களுக்கு சொல்லுவது என்ன என்றால் நீங்களும் காலம் பார்த்து காயை நகர்த்த வேண்டும். அப்பொழுது தான் எந்த வித கஷ்டமும் இல்லாமல் எளிதில் காரியத்தை வெற்றி பெற வைத்துவிடலாம்.

மக்களிடம் அதிகப்பட்சம் இருக்கின்ற விசயம் ஒன்று அவசரப்பட்டு வேலை செய்வார்கள் அப்படி இல்லை என்றால் வேலையை செய்யாமல் இருப்பார்கள். கெடுதல் நேரத்தில் நாம் சும்மா உட்கார்ந்துக்கொண்டு இருக்கலாம். நல்ல நேரத்தில் அவசரமாக செயல்பட்டு நம்முடைய வேலையை முடித்துவிடலாம்.

உங்களுடைய சோதிடரிடம் நீங்கள் கேட்டால் உங்களின் ஜாதகத்தை கணித்து நல்ல நேரம் எது கெட்ட நேரம் எது என்று சொல்லிவிடுவார்கள். பெரும்பாலும் சோதிடர்கள் அதிகம் உங்களிடம் பேசமாட்டார்கள். அவர்களிடம் கொஞ்சம் பணத்தை அதிகம் கொடுத்து இதனை எல்லாம் கேட்டு தெரிந்துக்கொண்டு அதன் படி நீங்கள் நடந்தீர்கள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு வாழ்க்கை ஈஸியாக இருக்கும்.

சோதிடர்களை நான் குறைச்சொல்லவில்லை நீங்கள் கொடுக்கும் பணத்திற்க்கு அவர்கள் பலனை மட்டும் தான் சொல்லமுடியும். டெக்னிக்கல் எல்லாம் அவர்களால் சொல்லமுடியாது. அவர்கள் டெக்னிக் விசயத்தை சொல்லவேண்டும் என்றால் அதற்கு தகுந்தார்போல் பணத்தை கொடுத்து கொஞ்சம் நேரம் எடுத்து குறித்து வாங்கிக்கொள்ளுங்கள்.

நீங்கள் காலத்தை அறிந்து நடந்தீர்கள் என்றால் உங்களுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. காலத்தை அறியாமல் செய்தால் நஷ்டம் ஏற்படுவதைவிட உங்களின் வாழ்வும் பாதிக்கப்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: