வணக்கம்!
ஒரு நண்பர் கேள்வி கேட்டுருந்தார். இலவச சேவையில் பரிகாரம் பரிந்துரை செய்வீர்களா அல்லது பரிகாரத்தை நீங்கள் செய்து தருவீர்களா என்று கேள்வி கேட்டுருந்தார்.
முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளுங்கள். நான் யாருக்கும் பரிகாரம் அதிகம் பரிந்துரை செய்வதில்லை. பரிகாரம் சொன்னாலும் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களில் அதிகம் பட்சம் ஒரு தீபம் ஏற்றி வரச்சொல்லுவது உண்டு. அதுவும் ஒரு ஒன்பது வாரத்திற்க்கு மட்டும் செய்யுங்கள் என்று சொல்லுவது.
வெளியூர் கோவில்கள் எல்லாம் நான் சொல்லுவது கிடையாது. நமது பரிகாரம் அனைத்தும் முடிந்தளவுக்கு உங்களின் ஊர்களில் செய்யகூடிய ஒன்றாக இருக்கும். இதுவரை நீங்கள் செய்து வந்த விசயத்தை கொஞ்சம் ஒழுங்கு முறையோடு செய்யக்கூடிய ஒன்றாக சொல்லுவது உண்டு.
குலதெய்வ வழிபாட்டை கூட உங்களின் வீட்டில் இருந்தே செய்வது எப்படி என்று தான் வழிகாட்டியுள்ளேன். வெளியூர் சென்று வருவதற்க்கு நேரம் மற்றும் பணம் விரையம் ஏற்படுவதால் அதனை எல்லாம் நான் சொல்லுவது கிடையாது.
ஆன்மீகத்தில் ஒரு சில விசயத்தை கடைபிடித்து வரும்பொழுது நமது நிலை உயரும். அந்த நிலை வந்த பிறகு உங்களுக்கு பரிகாரம் செய்யலாம். அப்பொழுது கூட உங்களின் பணம் மற்றும் உங்களின் தேவை என்ன என்பதை பொறுத்து தான் இதனை எல்லாம் செய்வது உண்டு.
முதலில் உங்களின் தரத்தை கொஞ்சம் உயர்த்திக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு பல யோசனை உருவாகும் அதன் பிறகு பரிகாரம் எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்.
ஐாதகத்தை பார்த்துவிட்டு அதில் என்ன இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொண்டு அதன்படி வாழ ஆரம்பித்து கொஞ்சம் உயர்ந்தவுடன் பரிகாரம் எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம். ஒன்றும் இல்லாமல் பரிகாரம் எல்லாம் தேவையில்லை.
பரிகாரம் நான் செய்வது எல்லாம் பல வருடங்களாக தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பரிகாரம் பரிந்துரைக்கிறேன். இவர்கள் எல்லாம் வசதி வந்தவுடன் தான் இந்த மாதிரி இறங்குகிறார்கள். உடனே இறங்குவதில்லை.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment