சித்தர்கள் பற்றிய எழுதிய பதிவை நிறைய பேர்கள் எதிர்பார்க்கின்றனர். நிறைய தகவல்களை தரவேண்டும் என்று நினைக்கின்றனர். உண்மையில் சித்தர்களைப்பற்றி முன்பே எழுதவேண்டும் என்று தான் நான் நினைத்தேன் ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பிய பக்கம் எல்லாம் சித்தர்களை பற்றி தான் எழுதிக்கொண்டு இருந்தனர். இந்த கூட்டத்தோடு நாமும் எழுதகூடாது என்பதால் அதனை தவிர்த்தேன். இன்று முக்கால்வாசி பேர் பதிவு எழுதுவதேயே நிறுத்திவிட்டனர்.
இன்றைய தேதியில் அதிக பதிவுகள் ஆன்மீகத்தை சார்ந்து வருவதில்லை என்று நினைக்கிறேன். சித்தர்களைப்பற்றி அவ்வப்பொழுது நாமும் பதிவிடலாம் என்று முடிவு எடுத்து எழுதுகிறேன்.
இன்றும் கோரக்கர் பற்றி தான் பதிவு. எனக்கு ஒரு ஆன்மீககுரு கிடைப்பதற்க்கு அம்மன் வழி செய்தாலும் கோரக்கர் வழிகாட்டியதால் தான் அது நடக்கும் என்று பிறகு தான் எனக்கு தெரிந்தது. ஏன் என்றால் ஆன்மீகம் என்ற ஒன்று இருப்பது கூட இவர் வழிகாட்டுதல் படி தான் நடந்தது. என்ன என்று தெரியாதபொழுது அவர் என்னை நோக்கி வந்து என்னை அதற்குள் இழுத்தார் என்று சொன்னால் தான் அது உண்மை.
இன்று உங்களுக்கு எல்லாம் ஏதோ ஒரு வழியில் உதவுகிறேன் என்று சொன்னால் கண்டிப்பாக உங்களுக்கு ஒரு சித்தர்களின் ஆசி இருக்கின்றது என்று அர்த்தம். பெயர் தான் வித்தியாசப்படும் என்பதை தவிர அனைத்தும் சித்தர்களின் ஆசி தான். ஏதோ ஒருவர் உங்களின் குடும்பத்தில் ஒரு சித்தரிடம் அதிகமான பற்று வைத்திருப்பார். அவரின் அனுக்கிரகம் தான் உங்களுக்கு என்னால் உதவமுடிகிறது.
உங்களுக்கு எப்படி ஒரு சித்தரின் ஆசி கிடைத்து உங்களுக்கு உதவுகிறனோ அதுபோல தான் எனக்கும் கோரக்கரின் அருளால் ஒரு குரு கிடைத்தார். நாம் என்ன தான் பெரிய ஆளாக இருந்தாலும் குரு என்ற ஒருவர் இருந்தால் தான் நாம் நிலைக்க முடியும் என்பது குரு கிடைத்த பிறகு உணர்ந்தேன்.
கோரக்கர் எப்படி உதவினார் என்பது எனக்கு தெரியாது அவரின் வழியாக கிடைத்தது என்பது பிற்பாடு பல சம்பவங்களின் வழியாக உணரமுடிந்தது. உணர்வுகள் தானே ஆன்மீகம். கோரக்கர் அருளால் குரு கிடைத்தார் என்று சொல்லலாம்.
கோரக்கரை மனதார பிராத்தனை செய்து வந்தால் போதும் அவரின் வழியாக பல நல்ல சம்பவங்கள் நடைபெறுகிறது என்பது என்னுடைய அனுபவத்தில் கண்ட உண்மை. கோரக்கரை தான் பிடிக்கவேண்டும் என்பதில்லை ஏதோ ஒரு சித்தர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டால் நமக்கும் நமது குடும்பத்தின் வாரிசுகளுக்கும் நல்ல வழி கிடைக்கும். அதனை நீங்கள் செய்து வரலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments:
Post a Comment