வணக்கம்!
கடந்த பதிவில் எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்லிருந்தேன். அப்பொழுது தான் கடவுள் நமக்கு நிறைய தருவார் என்று சொல்லிருந்தேன்.
சந்திரன் ஒருவருக்கு சரியாக இருந்தால் எந்த நேரமும் செயலில் ஈடுபடமாட்டார் ஆனால் மிக சரியான நேரத்தில் செய்யவேண்டியதை செய்துவிடுவார்கள்.
எந்த நேரமும் செய்வதை விட சரியான நேரத்தை நாம் பார்த்து அந்த நேரத்தில் நாம் செயலில் இறங்கிவிட்டால் பிரபஞ்ச சக்தியும் நமது முயற்சியும் இணைந்து வெற்றியை தரும். இதனை வைத்து தான் சோதிடம் இருக்கின்றது.
சந்திரன் சரியில்லாத ஆட்களை பார்த்தால் எதையாவது ஒன்றை செய்துக்கொண்டே இருப்பார்கள். செயலில் வெற்றியை பெற்றுவிடமாட்டார்கள். சந்திரன் அவர்களின் மனநிலையில் உள்ள சக்தியை வீணாகவே செலவு செய்ய வைத்துவிடும்.
இயற்கை சாதகமாக இருந்தால் நாம் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம். இயற்கை நமக்கு சாதகம் இல்லை என்றால் நாம் வெற்றி பெற்றுவிடமுடியாது. சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் செயல்படுங்கள். எளிதில் அனைத்தையும் சாதகமாக்கிக்கொள்ளமுடியும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell No : 9551155800
No comments:
Post a Comment