வணக்கம்!
சோதிடத்தில் உள்ள அடிப்படையை லக்கினத்தை வைத்து தான் பார்க்கவேண்டும். ராசியை வைத்து அவ்வப்பொழுது நடைபெறும் கோச்சாரபலன்களை தெரிந்துக்கொள்ளவேண்டும்.
லக்கினத்தை வைத்து பார்க்கும்பொழுது உங்களின் உடல்நிலை காட்டகூடிய அமைப்பு. உடல்நிலையில் தான் அனைத்தும் நடைபெறும் மனநிலையில் நடப்பது சந்திரனை வைத்து காணலாம்.
யோகாதிபதியை ஒரு சிலர் தவறாக ராசியை வைத்து கணித்துக்கொண்டு இருக்கின்றனர். பாக்கியஸ்தானஅதிபதி தான் யோகாதிபதியாக வருவார். லக்கினத்தில் இருந்து ஒன்பதாவது அதிபதி யோகாதிபதியாக இருக்கும்.
யோகாதிபதி எதற்கு என்றால் உங்களின் தெய்வவழிபாடு மற்றும் தர்மகாரியங்கள் செய்வதற்க்கு உகந்ததது. யோகாதிபதியாக எது வருகின்றதோ அன்றைய நாளில் செய்யப்படவேண்டும்.
ஒரு சிலருக்கு தசாநாதன் நல்ல வலுவாக அமைந்தால் உங்களின் நல்ல காரியம் அனைத்தும் தசாநாதனின் நாளில் தான் நடைபெறும். அந்தளவுக்கு வாரி பலன்களை வழக்ககூடியது உங்களின் தசாநாதர். உங்களின் தசாநாதன் நாளிலிலும் இப்படிப்பட்ட காரியங்களை செய்யலாம்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
Cell no: 9551155800
No comments:
Post a Comment