Followers

Monday, February 20, 2017

சிவனும் சந்திரனும்


வணக்கம்!
          நிறைய நண்பர்களுக்கு நான் பெளர்ணமி கிரிவலத்தை பரிந்துரை செய்து இருக்கிறேன். நான் பலதடவை திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தாலும் நம்முடைய நண்பர்களையும் அங்கு சென்று வாருங்கள் என்று சொல்லியுள்ளேன். 

நான் சென்னையில் இருந்தால் மாதந்தோறும் எப்படியும் ஒரு முறையாவது பயணம் மேற்க்கொண்டு செல்வது உண்டு. தற்பொழுது தஞ்சாவூரில் இருப்பதால் இங்கிருந்து திருவண்ணாமலை சென்றுவருவதற்க்கு அதிகம் தூரம். திருவண்ணாமலை சென்றே ஒரு வருடத்திற்க்கு மேல் ஆகிவிட்டது. அண்ணாமலையார் கூப்பிடவில்லை என்று இருந்துவிடவேண்டியது என்று இருக்கிறேன்.

நமது ஊருக்கு அருகில் இருக்கும் சிவாலயங்கள் சென்று வருவது உண்டு. நாம் அம்மனை வரவழைத்து எல்லா வேலையும் செய்தாலும் என்னுடைய தனிப்பட்ட வேலைக்கு இப்படி பல கோவில்கள் சென்று வந்துக்கொண்டு தான் இருக்கிறேன்.

நாம் என்ன செய்கிறோம் என்பதை பிறர்க்கும் பரிந்துரை செய்வது பழக்கம். உங்களின் ஜாதகத்தில் சந்திரனை வலுப்படுத்த நிறைய சிவாலயங்கள் செல்வதும் ஒரு விதத்தில் நல்ல பரிகாரமாக இருக்கும்.

சந்திரனுக்கும் சிவனுக்கும் என்ன இருக்கின்றது என்று கேட்கலாம். தர்க்கம் செய்வதற்க்கு இது எல்லாம் இல்லை என்றே சொல்லலாம். நமக்கு தேவை நமக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும். நமது வாரிசுகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவேண்டும். இந்த பிறவி எடுத்ததை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பது மட்டுமே.

ஜாதகத்தில் உள்ள சந்திரன் நமக்கு ஒரு நல்ல வழியை கொடுக்க இது கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்பது என்னுடைய அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன். இதனை செய்து வரலாம். தற்பொழுது சிவராத்திரி வருவதால் அதனையும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: