வணக்கம்!
பூர்வபுண்ணியத்தில் சனிபகவான் இருந்தால் எப்படிப்பட்ட பிரச்சினை எல்லாம் வரும் என்பதைப்பற்றி பல பதிவுகளில் நாம் பார்த்து இருக்கிறோம். சனிபகவானுக்கும் ஐந்தாவது வீட்டிற்க்கும் அந்தளவுக்கு ஆகாது என்ற சொல்லவேண்டும்.
ஐந்தில் சனி நின்றால் குழந்தை பாக்கியம் தாமதம் ஆகும். ஐந்தில் நிற்க்கும் சனி உங்களுக்கு குழந்தை இருந்தால் கூட உங்களின் குழந்தைகளை எதிர்காலத்தில் பாதிக்கும் என்பது தான் பல ஜாதகத்தில் அனுபவத்தில் நான் பார்த்து இருக்கிறேன்.
ஐந்தில் சனி இருக்கும் நண்பர்கள் தன்னுடைய முயற்சியால் இந்த பிரச்சினையை தீர்க்கமுடியும் அதாவது தன்னுடைய ஆன்மீகபலத்தால் இதனை தீர்க்கமுடியும். ஐந்தில் உள்ள சனி தோஷத்தை உங்களுக்கு தந்து அது உங்களை பல விதத்திலும் முயற்சி செய்ய வைக்கும்.
சிறந்த ஆன்மீகவாதியாக உருவாக்குவதற்க்கு ஐந்தில் உள்ள சனி வழி வகுக்கும். பூர்வபுண்ணியத்தை சரி செய்ய அது வழிக்கொடுக்கும். உங்களை ஆன்மீகவாதியாக மாற்றிவிடும் என்பது தான் உண்மை.
இதுவரை எந்த முயற்சியும் செய்யவில்லை என்றால் உங்களின் ஜாதகத்தை இந்த பரிகாரத்திற்க்கு அனுப்பி பரிகாரம் செய்துக்கொள்ளலாம். தங்களின் குடும்பத்தினர்களின் ஜாதகத்தையும் இதில் இணைத்துக்கொள்ளுங்கள்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment