வணக்கம்!
இன்று காலை எங்களின் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு (அண்ணாமலை உண்ணாமலை அம்மன்) ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெற்றது. 126 அடி உயர ஏழுநிலை இராஜகோபுரத்திற்க்கு கும்பாபிஷேகம் அதனை கண்டுவிட்டு தற்பொழுது பதிவை தருகிறேன்.
பூர்வபுண்ணியம் நன்றாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே பல நல்ல விசயங்கள் நடைபெறும். நாம் நினைக்கும் அனைத்து நல்ல விசயங்களும் நடைபெறும். பூர்வபுண்ணியம் சரியில்லை என்றால் ஒரு கோவிலுக்கு சென்று சாமிகூட கும்பிடமுடியாது.
பூர்வபுண்ணியம் வலுபெறுவதற்க்கு என்ன வழி என்று பார்க்கவேண்டும். உங்களின் ஜாதகத்தில் ஐந்தாவது வீட்டு அதிபதி எப்படி இருக்கிறார். ஐந்தாவது வீட்டிற்க்கு எப்படிப்பட்ட கிரகங்களின் பார்வை இருக்கின்றது என்பதை பார்க்கவேண்டும்.
ஐந்தாவது வீட்டிற்க்கு சுபகிரகங்களின் பார்வைப்பட்டால் நன்றாக இருக்கும். தீயகிரகங்களின் பார்வைப்பட்டால் பிரச்சினை அதிகமாக இருக்கும். இது தான் பல வருடங்களாக தெரிந்த கதை புதியதாக ஒன்றை சொல்லுங்கள் என்று நினைப்பது தெரிகிறது.
ஐந்தாவது வீட்டின் அதிபதி யார் என்று பார்த்து அந்த கிரகத்திற்க்கு நல்ல பலனை கொடுக்ககூடிய பரிகாரத்தை செய்தால் போதும். கிரகத்திற்க்கு பரிகாரத்தை செய்துவிட்டு உங்களின் குலதெய்வத்தை வணங்கினால் ஐந்தாவது வீடு நல்ல பலன் பெறும்.
பூர்வபுண்ணிய வீட்டிற்க்கு பரிகாரம் தற்பொழுது அறிவித்து இருக்கிறேன். அதற்கு உங்களின் ஜாதகத்தை அனுப்பிவையுங்கள். நல்ல பலனை உடனே எதிர்பார்க்கலாம்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பலாம். வரும் பத்தாம் தேதிக்குள் அம்மன் பூஜை நடத்தப்படும்.
அம்மன் பூஜைக்கு காணிக்கை அனுப்பலாம். வரும் பத்தாம் தேதிக்குள் அம்மன் பூஜை நடத்தப்படும்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment