வணக்கம்!
நமது மனம் என்ன நினைக்கும் என்றால் நாம் செய்வதே அனைத்தும் சரி என்று நினைக்கும். உலகத்தில் உள்ள வீணாகபோனாவர்கள் அனைவரும் அவர் அவர்களின் மனத்திற்க்கு தகுந்தமாதிரி அனைத்திலும் செயல்பட்டதால் தான் வீணாக போயிருப்பார்கள்.
மனதை சொல்லுவதை எல்லாம் கேட்டு அனைத்தையும் செய்யாதே என்று சொல்லிக்காட்டுபவர் தான் குரு. குரு சொல்லுவதை நாம் ஏற்பதே கிடையாது. அவர் எதையாவது சொல்லுவார் அவர்க்கு என்ன தெரியும் என்று உங்களின் மனம் உங்களை ஏமாற்றிவிடும்.
உலகத்தில் உள்ள குருவை எல்லாம் கொன்றது அவர்களின் சீடர்களாக தான் இருப்பார்கள். இந்த காலத்தில் மட்டும் இல்லை ஆதிகாலத்தில் இருந்தே இப்படி தான் நடந்துக்கொண்டு இருக்கின்றது.
குரு சொல்லுவதே மட்டும் கேட்டு நடந்துவிட்டால் நமது வாழ்க்கை மாறிவிடும். நாம் என்ன நினைப்போம் இவன் என்ன சொல்லுவது நாம் என்ன கேட்பது. நமக்கு நல்லது செய்வதற்க்கு இவன் யார் என்று உங்களின் மனம் உங்களை கிளப்பி சந்தேகப்பட வைத்துவிடும்.
சிந்திப்பது நல்லது தான் அதே நேரத்தில் அடுத்தவர்கள் சொல்லுவதையும் கேட்டு உங்களின் வாழ்க்கையில் செயல்பட்டால் உங்களின் வாழ்க்கை ஒரு அற்புதமான வாழ்க்கையாக இருக்கும். உங்களின் ஜாதகத்தில் பெரியளவில் தோஷம் இருந்தால் கூட குருவின் வழிகாட்டுதல் இருந்தால் நீங்கள் வெற்றிபெற்றுவிடலாம்.
எனக்கு தெரிந்தவரை என்னுடைய அனுபவத்தில் ஜாதகத்தில் உள்ள தோஷத்தில் வீணாக போனவனைவிட தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று நினைத்து வீணாக போனவன் தான் அதிகமாக இருப்பான்.
அன்புடன்
ராஜேஷ்சுப்பு
No comments:
Post a Comment