Followers

Friday, July 28, 2017

கோச்சாரபடி கடன்

ணக்கம்!
          கடன் ஏற்படுவதற்க்கு கோச்சாரப்படி செல்லும் கிரகங்களும் ஒரு காரணமாக இருக்கின்றது. கோச்சாரப்படி ஒரு கிரகம் ஆறாவது வீட்டு அதிபதி அல்லது ஆறாவது வீட்டை கடக்கும் பொழுது சம்பந்தப்பட்ட ஜாதகர்க்கு கடனை ஏற்படுத்திவிடும்.

ஆறாவது வீட்டை அல்லது அதிபதியை சந்திரன் கடக்கும்பொழுதும் இது நடந்துவிடுகிறது. மாதம் ஒரு முறை கடன் வாங்கும் நபர்களும் இருக்கதானே செய்கின்றார்கள். ஒரு சிலர் நாள் முழுவதும் கடன் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள். அது பிச்சைக்காரர்களை விட மோசமான கிரகஅமைப்பு இருக்கும்.

கோச்சாரப்படி ஆறாவது வீட்டு அதிபதி தன்னுடைய சொந்ந வீட்டிற்க்கு வரும்பொழுது அது கடனை ஏற்படுத்திவிடும். கடனை ஏற்படுத்தவில்லை இல்லை என்றால் நோயை ஏற்படுத்திவிடுவதும் உண்டு.

கோச்சாரபடி ஒரு கிரகம் ஆறாவது வீட்டை கடந்துக்கொண்டு தான் இருக்கும் அனைவருக்கும் கடன் ஏற்படுகிறதா என்று கேட்கலாம். ஒரு சிலருக்கு வேறு விதமாக பலனை கொடுக்கலாம். சண்டை சச்சரவை கூட கொடுக்கலாம்.

ஒரு சிலருக்கு ஆறாவது வீட்டை கடக்கும்பொழுது அஜீரணகோளாறு கூட ஏற்படும். அவர் அவர்களின் ஜாதகத்தை பொறுத்து கணிக்கவேண்டும். கடன் ஏற்படும் நிலையில் இருப்பவர்கள் இந்த நேரத்தில் காெஞ்சம் எச்சரிக்கை உணர்வோடு இருந்தால் போதும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: